அம்பானிக்கு தாராள மனசு.. குறைந்த விலை திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. விட்றாதீங்க..
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக அவ்வப்போது புதிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். சமீபத்தில் கூட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகை வழங்கியது ஜியோ நிறுவனம்.
குறிப்பாக இந்நிறுவனம் வழங்கும் சலுகைகள் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா (EXTRA DATA) நன்மையை வழங்கி உள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம் ( jio rs 1198 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 18ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) , ன்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சவ்பால் (Chaupal), டாகுபே (Docubay), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi), ஜியோ டிவி (JioTV) ஆகிய தளங்களின் சந்தாவை வழங்குகிறது ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் ( jio rs 749 plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அதேபோல் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக அதிக டேட்டாவை விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
அதேபோல் ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) மற்றும் ஜியோ டிவி (JioTV)போன்ற சேவைகளின் அணுகல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ( jio rs 398 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபொல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூட 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது.
சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்ச்சோய் (Hoichoi), ஜியோடிவி (JioTV), சௌபால் (Chaupal), டாக்குபே (DocuBay), எபிக் ஆன் (EPIC ON) ஆகிய தளங்களின் சந்தாவை வழங்குகிறது ஜியோ ரூ 398 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாப ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோகிளவுட் (JioCloud) அணுகல் கூட உள்ளது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ 398 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 399 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூட 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), ஜியோ டிவி (JioTV) போன்ற நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ 399 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 219 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூட 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), ஜியோ டிவி (JioTV) போன்ற நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








