Home
News

தலைவரின் தாராள மனசு.. 2 ஜியோ திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 90 நாள் வேலிடிட்டி.. என்ன விலை?

ஜியோ (Jio) நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தினாலும் சில அசத்தலான சலுகைகளை வழங்கிக் கொண்டே தான் இருக்கிறது. அதாவது சில பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் இன்னமும் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மைகளை இப்போதும் வழங்கி வருகிறது. குறிப்பாக இதுபோன்ற எகஸ்ட்ரா டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் மக்கள் அதிக தேர்வு செய்கின்றனர்.

ஆனால் ஏர்டெல் (airtel) நிறுவனம் ஜியோ போன்ற சலுகைகளை வழங்குவதில்லை என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் எக்ஸ்ட்ரா டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் அதிக நாள் வேலிடிட்டி தரும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இப்போது அந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

தலைவரின் தாராள மனசு.. இரண்டு ஜியோ திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா..

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 164ஜிபி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.

இதுதவிர தினமும் 100 எஸ்எஸ்எம்ஸ்,ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும். அதேபோல் இந்த திட்டத்திலும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குகிறது ஜியோ நிறுவனம். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

ஆனாலும் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.

தலைவரின் தாராள மனசு.. இரண்டு ஜியோ திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா..

மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்திருந்தாலும் இன்னும் முழுமையாக 4ஜி சேவையை அறிமுகம் செய்யவில்லை. எனவே ஜியோ நிறுவனத்தின் இதுபோன்ற பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்து சிக்னல் பிரச்சனை இன்றி பயன்படுத்துவதே நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio offers extra data in two prepaid plans: Do you know which plans?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X