ஐபோன் 7 கருவிகளுடன் ஒரு ஆண்டிற்கு இலவச ஜியோ சேவை!

Written By:

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ கால், 20 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ் போன்றவற்றை ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்க இருக்கின்றது. ரூ.18,000 மதிப்புடைய இந்தச் சலுகைகள் ஐபோன் பனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஐபோன் பயனர்கள் அனைவரும் ஜியோ நெட்வர்க் வழங்கும் புதிய சலுகையினை ஜனவரி 1 ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியும். புதிய திட்டத்தின் படி ஐபோன் பயனர்கள் ஒரு ஆண்டிற்கான ஜியோ சேவையினை பயன்படுத்த முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அறிமுக சலுகை

அறிமுக சலுகை

ரிலையன்ஸ் ரீடெயில் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் ஐபோன் கருவியினை வாங்கும் போது ஜியோ அறிமுக சலுகையினை டிசம்பர் 31, 2016 ஆம் ஆண்டு வரை பயன்படுத்த முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மதிப்பு

மதிப்பு

ஜனவரி 1, முதல் ஐபோன் பயனர்கள் ரூ.1,499 திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டிற்கு ஜியோ சேவைகளை பெற முடியும். ஜியோவின் மொத்த சலுகையின் மதிப்பு ரூ.18,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம்

திட்டம்

ரூ.1,499 திட்டத்தின் படி அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் காலிங் மற்றும் தேசிய ரோமிங், 20 ஜிபி அளவு 4ஜி டேட்டா, இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா, 40 ஜிபி வை-பை டேட்டா, அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் ஜியோ ஆப் சந்தா வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐபோன்

ஐபோன்

ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு 15 மாதங்களுக்கு ஜியோ சேவைகளைப் பயன்படுத்த முடியும். புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளைப் போன்றே ஐபோன் 6, 6 பிளஸ், 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்இ போன்ற கருவிகளுக்கும் ஜியோ சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தள்ளுபடி

தள்ளுபடி

முதல் முறையாக என்டர்பிரைஸ் பயனர்களுக்கு 25 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நெட்வர்க்களை விட விலை குறைந்த சேவையினை ஜியோ வழங்குகின்றது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஜியோ நெட்வர்க் மூலம் ஆப்பிள் பயனர்கள் 100 சதவீத 4ஜி டேட்டாவினை பயன்படுத்த முடியும். இதன் மூலம் எச்டி தரத்தில் வாய்ஸ் கால், தடையில்லா வீடியோ அனுபவம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். மேலும் 300க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்களையும் பார்க்க முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐபோன் 7

ஐபோன் 7

ஆப்பிளின் புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவி சில்வர், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் 32, 128 மற்றும் 256 ஜிபி வகைகளில் கிடைக்கின்றது. ஜெட் பிளாக் நிற ஐபோன் 128 ஜிபி மட்டுமே கிடைக்கின்றது.

விலை

விலை

32, 128, 256 ஜிபி ஐபோன் 7 விலை முறையே ரூ.60,000, ரூ.70,000 மற்றும் ரூ.80,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெரிய ஐபோன் 7 பிளஸ் கருவியின் விலை முறையே ரூ.72,000, ரூ.82,000 மற்றும் ரூ.92,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐபோன் 7

ஐபோன் 7

ஆப்பிளின் புதிய ஐபோன் 7 கருவியில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, 3டி டச், ஐபோன் 7 பிளஸ் கருவியில் 5.5 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் 3டி டச் வழங்கப்பட்டுள்ளது. குவாட்-கோர் ஆப்பிள் ஏ10 பியூஷன் பிராசஸர், 12 எம்பி ஐசைட் கேமரா, 4கே வீடியோ பதிவு செய்யும் வசதியும், ஐபோன் 7 பிளஸ் கருவியில் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

ஐபி67 சான்று பெற்றிருப்பதால் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கருவியில் வாட்டர் ப்ரூஃப் அம்சம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Jio offers exclusive plans on iPhone 7 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot