ஆறுதல் திட்டமா?- இதுல மட்டும் ஒரு ஸ்பெஷல்: இந்த விலை திட்டத்தில் கூடுதல் டே்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல்!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ரூ.601 திட்டத்தை குறுகிய நாட்கள் சலுகையோடு வழங்குகிறது. இந்த திட்டத்தின் முக்கிய ஈர்ப்பு ஓவர் தி டாப் ஓடிடி நன்மைகள் மற்றும் இதில் வழங்கப்படும் டேட்டா நன்மைகள் ஆகும்.

ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

ரிலையன்ஸ் ஜியோ தற்போது ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான சந்தாவை வழங்குகிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் கட்டண உயர்வுகளை அறிவித்தது. இதன் காரணமாக பல ப்ரீபெய்ட் திட்டங்கள் விலை உயர்வை சந்தித்தது. அதோடு மட்டுமின்றி சில திட்டங்களில் மாற்றங்களும் செய்யப்பட்டன, அதில் முக்கியமான ஒன்றாக பல திட்டங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல் நீக்கப்பட்டது.

கிரிக்கெட்

கிரிக்கெட்" பிரிவின் கீழ் திட்டம்

தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஒரே ஒரு திட்டத்தில் மட்டுமே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சலுகையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரூ.499 மதிப்பிலான மொபைல் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோவின் "கிரிக்கெட்" பிரிவின் கீழ் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.601 ஆகும். இந்த திட்டத்தில் பயனர்கள் ஏணைய சலுகையை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.601 திட்ட நன்மைகள்

ரூ.601 திட்ட நன்மைகள்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.601 திட்ட நன்மைகள் மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம். ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.601 திட்டத்தில் 28 நாட்கள் என்ற குறுகிய கால வேலிடிட்டியை மட்டுமே வழங்குகிறது. இந்த திட்டத்தின் முக்கிய சலுகை ஓவர் தி டாப் ஓடிடி நன்மை மற்றும் இது வழங்கப்படும் டேட்டா நன்மை ஆகும். பயனர்கள் ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை பெறுவார்கள். இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் 6 ஜிபி போனஸ் டேட்டாவைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.601 திட்டத்தில் வழங்கப்படும் மொத்த அதிவேக 4ஜி டேட்டா வேகத்துடன் 90ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ க்ளவுட்

ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ க்ளவுட்

பயனர்கள் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. அதோடு ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ க்ளவுட் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் தொகுப்பிற்கான அணுகலை வழங்குகிறது. கட்டண உயர்வுகள் காரணமாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்களை விட மலிவாகி விட்டது என்பது மறுபுறம் கவனிக்கத்தக்க ஒன்று. இதன் காரணமாகவே ஜியோ அணுகலை நிறுத்தியது எனவும் கூறப்படுகிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நன்மை

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நன்மை

எதிர்காலத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நன்மைகளுடன் புத்தம் புதிய திட்டங்களை ஜியோ மீண்டும் கொண்டுவதற்கு ஏணைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. அதேபோல் புதிய ஓடிடி திட்டங்களின் விலை மற்றும் கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கருத்தில் கொண்டே செயல்படும்.

விலை உயர்வை அறிவித்த ஜியோ

விலை உயர்வை அறிவித்த ஜியோ

பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்த பின்னர், இதே போன்ற அறிவிப்பை இப்போது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமும் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் கட்டண உயர்வை அறிவித்த பின்னர், அதன் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனம், ப்ரீபெய்ட் திட்டங்களை தொழில்துறையில் மலிவானதாக வைத்துள்ளது.

சராசரி வருவாயை அதிகரிக்க வாய்ப்பு

சராசரி வருவாயை அதிகரிக்க வாய்ப்பு

இது சந்தாதாரர்களின் சந்தைப் பங்கை மேலும் அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு பயனருக்குச் சராசரி வருவாயை (ARPU) கணிசமாக அதிகரிக்க உதவும். இதே காரணத்தை இதற்கு முன்பு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து திட்டங்களும் இந்த விலை உயர்வைப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஜியோவின் பெரும்பாலான பிரபலமான திட்டங்களின் விலை அதிகரித்துள்ளது.

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறை

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறை

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் அதிகரிக்கப்படக் கட்டணங்கள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின் படி, ஜியோ நிறுவனத்தின் அடிப்படை திட்டமான ரூ. 75 மதிப்புள்ள திட்டமானது இப்போது அறிவிக்கப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பின்னர் இனி ஜியோ பயனர்களுக்கு ரூ. 91 என்ற விலையில் தான் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 50 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும்.

8 நாட்கள் செல்லுபடியாகும்

8 நாட்கள் செல்லுபடியாகும்

அதேபோல், ஜியோவிடம் இருந்து கிடைக்கும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடைய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் ரூ. 129 என்ற விலை திட்டமானது இனி விலை அதிகரிப்பிற்குப் பின்னர் ரூ. 155 செலவில் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டம் 2ஜிபி மாதாந்திர டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இது ஏர்டெல் மற்றும் ஜியோவின் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டங்களை விட எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சற்று மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு

தினமும் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு

ஜியோவின் ரூ. 149 என்ற விலை திட்டமானது இனி விலை அதிகரிப்பிற்குப் பின்னர் ரூ. 179 செலவில் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டம் தினமும் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதே போல், நிறுவனத்தின் ரூ. 199 திட்டமானது இனி விலை அதிகரிப்பிற்குப் பின்னர் ரூ. 239 என்ற விலையில் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஆலிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Offers Disney Plus Hotstar access With this only one recharge plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X