Jio பயனர்களுக்கு தினமும் 5GB டேட்டா.. 96GB எக்ஸ்டரா டேட்டா இலவசம்.. எந்த திட்டம் என்ன விலை?
டேட்டா அளவு பற்றிய கவலையே இல்லாமல், தினமும் உங்களுக்கு தடையில்லாமல் 5ஜிபி டேட்டா (5GB daily data plan) வேண்டுமா? அப்படியானால், நீங்கள் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Prepaid Plan) தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), தற்போது 44 கோடியைத் தாண்டிய அதன் பரந்த பயனர் தளத்திற்கான சலுகைகளை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. ஜியோ டெலிகாம் நிறுவனம் தொடர்ந்து பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை (Jio recharge plans) அறிமுகப்படுத்தி வருகிறது.

இவற்றின் நடுவே நிறுவனம் இப்போது தினசரி டேட்டா ஒதுக்கீடுகளுக்கு மேல் கூடுதல் டேட்டா (extra data) நன்மை கிடைக்கும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் தடையற்ற சர்பிங் அனுபவத்திற்கு போதுமான டேட்டா நன்மையை வழங்குவதால், ஹெவி டேட்டா யூசர் (heavy data users) பயனர்களுக்கு இவை ஏற்றது. ஜியோவிடம் இருந்து கூடுதல் நன்மைகளுடன் தினசரி 5 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
ஜியோ (Jio) இப்போது 3 ரீசார்ஜ் திட்டங்களை தினசரி 5ஜிபி டேட்டா நன்மையோடு கொண்டு வந்துள்ளது. இது பயனர்களுக்கு தினசரி 5 ஜிபி டேட்டாவை வழங்குவதோடு, இது கூடுதல் டேட்டா சலுகைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 3 புதிய திட்டங்களின் விலை என்ன? இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.699 திட்டம் (Jio Rs 699 Plan):
ஜியோவின் இந்த ரூ.699 விலை திட்டம் தினமும் 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது மொத்தம் 140 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் கூடுதல் நன்மைகளாக 16ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் மொத்த டேட்டாவின் அளவு 156 ஜிபிக்கு செல்கிறது. ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) சேவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கிறது.
ஜியோவின் ரூ 2099 திட்டம் (Jio Rs 2099 Plan):
இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் தினசரி 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது கூடுதலாக 14 நாட்கள் செல்லுபடியாகும். இத்திட்டம் கூடுதலாக 48 ஜிபி உட்பட, முழு வேலிடிட்டி காலத்திற்கும் மொத்தமாக 538 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) சந்தாக்கள் அடங்கும்.
ஜியோவின் ரூ 4199 திட்டம் (Jio Rs 4199 Plan):
இது ஒரு அரையாண்டு கால திட்டமாகும். இது கூடுதல் 28 நாட்கள் வேலிடிட்டி (extra validity) உடன் 168 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டம் தினசரி 5ஜிபி டேட்டாவை வழங்குவதோடு, 96ஜிபி கூடுதல் டேட்டாவை (96GB extra data) வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 1076ஜிபி டேட்டாவை கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த புதிய திட்டங்கள் மூன்றும் டேட்டா திட்டங்களாக செயல்படுகின்றன. இந்த 3 திட்டங்களும் தினசரி 5ஜிபி டேட்டாவை வழங்குவதோடு, கூடுதல் டேட்டா மற்றும் கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டங்கள் எதிலும் வாய்ஸ் கால் (voice call) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மை போன்று எதுவுமே கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்கள் ஜியோ லிங்க் (JioLink) பயனர்களுக்கு பொருத்தமானது.


Click it and Unblock the Notifications