பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.61 மதிப்புள்ள போனஸ் டேட்டாவை வழங்கும் Jio.. பயனர்கள் குஷி...
ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் எக்கச்சக்க சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.61 மதிப்புள்ள போனஸ் டேட்டாவை வழங்கி உள்ளது. குறிப்பாக இந்த போனஸ் டேட்டா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது போனஸ் டேட்டா கிடைக்கும் அந்த திட்டம் மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ஜியோ நிறுவனம் நிறுவனம் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டத்தில் தான் போனஸ் டேட்டா கிடைக்கிறது. குறிப்பாக இந்த ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் ரூ.61 மதிப்புள்ள 6ஜிபி போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையும் இதில் உள்ளது. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஒரு ஃபீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஜியோ பாரத் போன் (Jio Bharat Phone) என்று அழைக்கப்படும் ஃபீச்சர் போன் மாடலை தான் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த புதிய ஜியோ பாரத் போன் ஆனது ஸ்மார்ட் ஃபீச்சர் போன் ஆகும்.
குறிப்பாக இதில் இண்டர்நெட் பயன்படுத்துவதோடு, யுபிஐ பேமன்ட் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு செயலிகளை கூட பயன்படுத்த முடியும். குறிப்பாக இதில் 4ஜி வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய ஜியோபோன் உடன் ஜியோ பாரத் பிளான்கள் கூட அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது இந்த புதிய போனை வாங்கினால் ரூ.123 விலை கொண்ட ஜியோ பாரத் மாதாந்திர பிளானில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 0.5 ஜிபி டேட்டா உள்ளிட்ட பல சலுகைகளைப் பெற முடியும். மேலும் இந்த ரூ.123 பிளான் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
அதேபோல் ரூ.1234 விலையில் ஜியோ பாரத் வருடாந்திர பிளானில் கூட ஜியோ பாரத் போன் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பிளான் தினசரி 0.5ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக ஜியோ பாரத் போனின் விலை ரூ.999-ஆக உள்ளது. இந்த போன் வரும் ஜூலை 7ஆம் தேதி விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








