Jio-வில் மொத்தம் 3 இருக்கு.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்தெந்த திட்டம்? என்ன விலை?
ஏர்டெல் நிறுவனத்துக்குப் போட்டியாக ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் அசத்தலான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மையை இங்கே பார்க்கலாம்.
ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.499 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கொடுக்கப்படுகிறது.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
ஜியோ நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1199 prepaid plan) ஆனது 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள்ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.
ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
ஜியோ நிறுவனம் விரைவில் இதேபோன்ற பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது ஜியோ நிறுவனம். எனவே தான் அதிக பயனர்கள் ஜியோவில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications








