Home
News

மறுபடியும் FREE.. அம்பானி இறக்கிய ஆஃபர்.. இனிமே ரீசார்ஜ் பண்ணா 50GB டேட்டா.. இந்த டேட்டாவை பெறுவது எப்படி?

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் சத்தமே இல்லாமல் மறுபடியும் இலவச டேட்டா சலுகையை கொடுக்க தொடங்கி இருக்கிறது. இந்த முறை ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் (AI Cloud Storage) டேட்டாவை இலவசமாக களமிறக்கி இருக்கிறது. ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் (Jio Prepaid Plan) மட்டுமல்லாமல், போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் (Postpaid Plan) கொடுக்கப்படுகிறது. இந்த இலவச டேட்டாவை பெறுவது எப்படி?

ப்ரீபெய்ட் திட்டங்களை பொறுத்தவரை ரூ.299 அல்லது அதற்கு மேல் விலை கொண்ட திட்டங்களில் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் (JioAICloud Storage) கிடைக்கிறது. இந்த ஸ்டோரேஜ் மூலம் ஏஐ ஸ்கேனர் (AI Scanner), ஏஐ மெமரிஸ் (AI Memories) மற்றும் டிஜிலாக்கர் (DigiLocker) ஆகியவற்றின் அனுகலை பெற்று கொள்ளலாம். ஒவ்வொரு ரீசார்ஜ் மூலமும் கிடைப்பதால், கஸ்டமர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மறுபடியும் FREE.. அம்பானி இறக்கிய ஆஃபர்.. இனிமே ரீசார்ஜ் பண்ணா 50GB!

போஸ்ட்பெய்ட் திட்டங்களை பார்க்கையில் அனைத்து ஃபேமிலி மற்றும் தனிப்பட்ட திட்டங்களிலும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஜியோ ரூ 349 போஸ்ட்பெய்ட் திட்டம், ஜியோ ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்டம், ஜியோ ரூ 649 போஸ்ட்பெய்ட், ஜியோ ரூ 749 போஸ்ட்பெய்ட் திட்டம் மற்றும் ஜியோ ரூ 1549 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகியவற்றில் 50 ஜிபிக்கான ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

பெரும்பாலான கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யும் ஜியோ ரூ 299 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 299 Prepaid Plan) இந்த கிளவுட் டேட்டா கிடைப்பதால், அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த திட்டத்தில் நம்ப முடியாத சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், ஓடிடி மட்டுமல்லாமல், கிளவுட் ஸ்டேரோஜ் டேட்டாவும் கிடைக்கிறது.

ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகைகளை 28 நாட்கள் வேலிடிட்டியில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது. ஆகவே, 42 ஜிபி 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது.

அதே நேரத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. சொல்லப்போனால், இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவானது 90 நாட்களுக்கு கிடைக்கிறது.

ஆகவே, 28 நாட்களுக்கு பிறகு அடுத்த ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா தொடர்ந்து கிடைக்கும். அதுவும் 48 மணி நேரத்துக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லையென்றால், ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. இவ்வளவு சலுகைகள் போகவே, இப்போது கூடுதலாகவும், இலவசமாகவும் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

இதன் மூலம் 50 ஜிபிக்கான ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்த முடியும். இதில் முன்பே சொன்னதை போல ஏஐ ஸ்கேனர், ஏஐ மெமரிஸ் மற்றும் டிஜிலாக்கர் ஆகியவற்றின் அனுகலும் கிடைக்கும். இதுவே போஸ்ட் திட்டங்களாக இருந்தால், ரூ 349 திட்டம் முதல் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி மட்டுமல்லாமல், இந்த ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது.

FAQs
கிளவுட் டேட்டா வழங்குநர்கள் யார் யார்?

ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பெரும் நிறுவனங்கள் கிளவுட் டேட்டாவில் கொடிக்கட்டி பறக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐகிளவுட் (iCloud), மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன்டிரைவ் (OneDrive) மற்றும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரைவ் (Google Drive) ஆகியவை கிளவுட் டேட்டாவில் பட்டையை கிளப்புகின்றன.

ஜியோகிளவுட் டேட்டா ஏன் வழங்கப்படுகிறது?

கிளவுட் டேட்டா பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்டர்நெட் பயன்படுன்பாடு அதிகரித்துவிட்டதால், கிளவுட் டேட்டாவை பயன்படுத்தும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், உள்நாட்டு டெலிகாம் கஸ்டமர்களிடையே கிளவுட் டேட்டாவை கொடுத்து கிளவுட் டேட்டா விரும்பிகளை தன்பக்கம் இழுக்க ஜியோ முடிவெடுத்துள்ளது.

கிளவுட் டேட்டா என்றால் என்ன?

கிளவுட் டேட்டா (Cloud Data) என்பது இன்டர்நெட் மூலம் அணுகக்கூடிய மற்றும் ஸ்டோர் செய்யக் கூடிய டேட்டாவாகும். வழக்கமாக, நாம் பயன்படுத்து ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற ஹார்ட்-டிரைவ் மெமரிகளை போலல்லாமல், முற்றிலும் ஆன்லைன் மூலம் சேவைகளை கொடுக்கிறது. இதற்காக இன்டர்நெட் தேவைப்படும். எங்கிருந்து வேண்டுமானாலும், உங்களது ஜிமெயில் ஐடி மட்டுமே வைத்து பயன்படுத்தி கொள்ள முடியும்.

GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offers 50GB JioAICloud Storage With Prepaid and Postpaid Plans Starting At Rs 299
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X