Home
News

ஜியோ மொபைல் நம்பர்களுக்கு டபுள் குஷியில் 336 நாட்கள்.. மாதம் ரூ.102-க்கு டேட்டா, ஓடிடி.. 4 திட்டங்கள் இதோ!

டெலிகாம் நிறுனங்களில் பிஎஸ்என்எல் மட்டுமே மலிவான விலைக்கு திட்டங்களை கொடுக்கும் என்று பல கஸ்டமர்கள் நினைக்கின்றனர். ஆனால், அதற்கு நிகராக ஜியோ நிறுவனமும் மலிவான விலைக்கு திட்டங்களை வைத்துள்ளது. இருப்பினும், இது ஜியோ 4ஜி பீச்சர் போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

மொத்தமாக 4 பீச்சர் போன் திட்டங்களை ஜியோ வைத்துள்ளது. ரூ.123 விலையில் இருந்து திட்டங்கள் கிடைக்கும். இவற்றில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தின் விலை ரூ.1234 ஆக இருக்கிறது. ஆகவே, மாத செலவு வெறும் ரூ.102 ஆக மட்டுமே இருக்கிறது.

ஜியோ மொபைல் நம்பர்களுக்கு டபுள் குஷியில் 336 நாட்கள்.. மாதம் ரூ.102..

ஜியோ நிறுவனத்தின் ரூ.123 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 123 Prepaid Plan): 28 நாட்கள் வேலிட்டியுடன் இந்த ஜியோ ரூ.123 திட்டம் கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 14 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். அதாவது, தினமும் 0.5 ஜிபி டேட்டாவாக கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் டேட்டா கிடைக்கும்.

300 எஸ்எம்எஸ்களை இந்த ஜியோ ரூ.123 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. குறிப்பாக ஓடிடி பிரியர்களுக்காகவே ஜியோடிவி (JioTV) சந்தா கிடைக்கிறது. ஜியோசாவன் (JioSaavn) இந்த திட்டத்தில் கிடைத்து இருக்கிறது. மாதாந்திர வேலிடிட்டி போதும் என்று சொல்லும் கஸ்டமர்களுக்கு ரூ.123 விலைக்கு தவிர்க்க முடியாத தேர்வாக இருக்கிறது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.234 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 234 Prepaid Plan): 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இந்த ஜியோ ரூ.234 ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதிலும் முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகிறது. தினமும் 0.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டா தீர்ந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பெற முடியும். ஜியோடிவி (JioTV) சந்தாவை இந்த ஜியோ ரூ.234 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. மேலும், ஜியோசாவன் (JioSaavn) கிடைக்கிறது. ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். முந்தைய திட்டத்தைவிட ரூ.101 விலை மட்டுமே அதிகமாக இருக்கிறது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.369 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 369 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தலாம். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். தினமும் 0.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

64 கேபிபிஎஸ் வேக டேட்டாவும், 0.5 ஜிபிக்கு பிறகு கிடைக்கும். ஜியோடிவி மற்றும் ஜியோசாவன் ஆப்களும் கிடைத்து இருக்கின்றன. இதற்கு அடுத்து வரும் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. 28 நாட்கள் கணக்கில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டியை கொடுத்து வருகிறது. ஒரு 28 நாட்களுக்கு ரூ.102 மட்டுமே செலவாக இருக்கிறது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1234 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1234 Prepaid Plan): 336 நாட்கள் வேலிடிட்டியை இந்த ஜியோ ரூ.1234 திட்டம் கொடுக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். ஒவ்வொரு 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 0.5 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Offers 4 Plan For 4G Feature Phone With Unlimited Voice Check Data And OTT Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X