Home
News

குறி வச்ச அம்பானி.. மாதாந்திரம் ரூ.102 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. 168 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் கட்டணங்கள் உயர்ந்ததை அடுத்து தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை பின்னிப்பெடல் எடுத்து வருகிறது. நாடு முழுவதும் 4ஜி சேவையை கொடுக்கவில்லை என்றாலும், அடிமட்ட விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் அதிக வேலிடிட்டியை கொடுப்பதே பிஎஸ்என்எல்லுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது. ஆனால், ஜியோ அதையும் விட்டுவைக்கவில்லை என்பதே உண்மை. இப்போது நாம் பார்க்கப்போகும் திட்டமும் அப்படித்தான். மாதத்துக்கு ரூ.102 செலவில் 336 நாட்களுக்கு வேலிடிட்டியை கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்க இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருந்தாலும், மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் மலிவான விலைக்கு திட்டங்களை வைத்திருக்கிறது. இதற்கு காரணம் 4ஜி வேகத்தில் டேட்டாவை கொடுக்காதது மட்டுமே. டெலிகாம் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல்லுக்கு மாறிய கஸ்டமர்கள்கூட டேட்டா வேகம் போதாமல் தவித்து வருகின்றனர்.

குறி வச்ச அம்பானி! மாதாந்திரம் ரூ.102 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி!

ஆகவே, பிஎஸ்என்எல் 4ஜி சேவை வரும் வரையில், ஜியோ நிறுவனத்தை அடித்து கொள்ள முடியாது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல. ஜியோ நிறுவனம், ஏற்கனவே அதற்காக வேலையை பார்த்துவிட்டது. அதாவது, ஜியோபாரத் திட்டங்கள் மூலம் பிஎஸ்என்எல் கொடுக்கும் மலிவு விலைக்கு நிகராக ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுக்கிறது. கூடவே 4ஜி வேகத்தையும் கொடுக்கிறது.

ஆகவே, 4ஜி சேவை வந்தாலும், மலிவு விலை திட்டம் ஜியோவிடம் மட்டுமே இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஜியோபாரத் திட்டங்களை பார்த்தாலே உங்களுக்கு அது புரிந்து விடும். 28 நாட்களுக்கு வெறும் ரூ.102 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது. அதாவது, 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை வழங்குகிறது. கூடவே, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவை கொடுக்கிறது.

ஜியோ ரூ 1234 திட்ட விவரங்கள் (Jio Rs 1234 Plan Details): இந்த ஜியோபாரத் திட்டத்தில் (JioBharat Plan) திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 336 நாட்களிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை பயன்படுத்தலாம். ஆனால், டேட்டா சலுகை மட்டும் தேவைக்கு ஏற்ப லிமிட்டாக கிடைக்கிறது.

அதாவது, நாளொன்றுக்கு 0.5 ஜிபி வீதம் 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 0.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் வீதம் 336 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோ சாவன் (Jio Saavn), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆப்கள் கிடைக்கின்றன.

இதைவிட மலிவான விலைக்கு திட்டம் வேண்டுமானால், ரூ.234 மதிப்பிலான ஜியோபாரத் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டத்தில் 56 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட்ல் லோக்கல் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும் வழங்கப்படுகிறது.

மேலும், 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் வீதம் 2 முறை வழங்கப்படும். டேட்டாவும் நாளொன்றுக்கு 0.5 ஜிபி வீதம் 28 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் மலிவான விலைக்கு வேண்டுமானால், பிஎஸ்என்எல் கொடுக்கும் விலைக்கு நிகராக ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. இதுகிட்டத்தட்ட 2ஜி மற்றும் 3ஜிக்கு நிர்ணயிக்கப்பட் விலையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offers 336 Days Validity Unlimited Voice Calls 168GB Data For Rs 1234 Check JioBharat Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X