Home
News

Jio-க்கு வருது கூட்டம்.. ரூ.160-க்கு வந்துருச்சு.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24GB டேட்டா!

ஜியோ (Jio) கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான அடிமட்ட விலையில் 336 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட பிஎஸ்என்எல்லுக்கு நிகராக லாபம் பார்க்காமல் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகள் இதோ.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்ந்த பிறகு பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்துவந்த கஸ்டமர்கள், இப்போது ஒவ்வொரு திட்டத்தையும் அலசி ஆராய்ந்து லாபம் இருந்தால் மட்டுமே அதை ரீசார்ஜ் செய்ய தொடங்கி விட்டனர். இல்லையென்றால், மலிவான விலைக்கு திட்டங்களை கொடுக்கும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனத்துக்கு மாறவும் தயாராக இருக்கின்றனர்.

Jio-க்கு வருது கூட்டம்.. ரூ.160-க்கு வந்துருச்சு.. 336 நாட்கள் வாய்ஸ்!

இதனால், ஜியோ நிறுவனம் அடிமட்ட விலையிலான திட்டத்தை இப்போதும் கொடுக்கிறது. விலையில் மாற்றம் இருந்தாலும், அதில் கூடுதல் சலுகைகளை கொடுக்கு கஸ்டமர்களை குளிர செய்துள்ளது. இப்போது, மாதத்துக்கு ரூ.160-க்கும் மலிவான விலையில் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுக்கிறது.

ஜியோ 336 நாட்கள் வேலிடிட்டி திட்டம் (Jio 336 Days Validity Plan): இந்த வருடாந்திர திட்டத்தின் விலை ரூ.1889ஆக இருக்கிறது. 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு சலுகை கிடைக்கிறது. ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதாவது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) வாய்ஸ் மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கால்கள் சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், டேட்டா சலுகையானது மொத்தமாகவே 24 ஜிபி மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, ஜியோ கஸ்டமர்கள் மாதத்துக்கு 2 ஜிபி வீதம் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும்.

எஸ்எம்எஸ் சலுகையும் அப்படித்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 336 நாட்களுக்கும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த எஸ்எம்எஸ்களை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 24 ஜிபி டேட்டாவை வேலிடிட்டிக்கு முன்பே பயன்படுத்தி விட்டாலும், டேட்டா தொடர்ந்து கிடைக்கும்.

ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறதா என்று கேட்டால். இல்லை, கூடுதலாக சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, மேற்கண்ட சலுகைகளுக்கு பிறகும் ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆப்களின் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இப்படி சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதற்கு அடுத்த வருடாந்திர திட்டமாக 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ரூ.3599 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா சலுகை கூடுதலாக கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது தீபாவளி சலுகையும் இந்த வருடாந்திர திட்டத்துக்கு கிடைக்கிறது.

ஜியோ 365 நாட்கள் வேலிடிட்டி திட்டம் (Jio 365 Days Validity Plan): இந்த திட்டத்திலும் வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்களை செய்து கொள்ளலாம். மேலும், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களும் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலல்லாமல், தினசரி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 2.5 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்.

எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். மேலும், ஜியோடிவி மற்றும் ஜியோ சினிமா ஆப்களை பெறலாம். இந்த திட்டத்தில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஜியோ வெல்கம் சலுகையை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த அன்லிமிடெட் 5ஜி சலுகை கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Offers 336 Days Validity Plan With Unlimited Voice Calls 24GB Data 100 SMS For Rs 1899
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X