Home
News

மெசேஜ் வந்துச்சா.. FREE கொடுத்து ஆஃப் செய்த அம்பானி.. 2 நாட்களுக்கு மட்டும்.. ஆனால், எல்லாருக்கும் கிடையாது!

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம், கடந்த செவ்வாய் கிழமை நெட்வொர்க் பாதிப்பை சந்தித்தது. கஸ்டமர்கள்கள் இன்டர்நெட், வாய்ஸ் கால்கள் போன்ற சேவைகளை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். இந்த கஸ்டமர்களுக்கு 2 நாட்கள் இலவச சேவைகளை (Two Days Free Services) ஜியோ நிறுவனம் இப்போது வழங்குகிறது. இந்த இலவச சேவை குறித்த கஸ்டமர்களுக்கு மேசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது உண்மையா? பொய்யா? என்பதை இப்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கோடிக்கணக்கான கஸ்டமர்களை கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த நிறுவனத்தின் சேவைகள் ஒரு சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டாலும், மிகப்பெரும் செய்தியாகிவிடுகிறது. அப்படி, கடந்த செவ்வாய் கிழமை பல்வேறு பகுதிகளில் நெட்வொர்க் பாதிப்பு ஏற்பட்டது.

மெசேஜ் வந்துச்சா.. FREE கொடுத்து ஆஃப் செய்த அம்பானி.. 2 நாட்களுக்கு!

மொபைல் சேவைகள் (Mobile Services) மட்டுமல்லாமல், பிராட்பேண்ட் சேவைகள் (Broadband) மற்றும் ஏர்ஃபைபர் சேவைகளும் (AirFiber Services) பாதிக்கப்பட்டன. அடுத்த சில மணி நேரங்களில் ஜியோ கஸ்டமர்கள் சோஷியல் மீடியாக்களில் இப்படி சேவைகள் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டு ஜியோ நிறுவனத்தை டேக் செய்ய தொடங்கி விட்டனர்.

இதற்கு ஜியோ நிறுவனம் அளித்த பதிலில், மும்பையில் இருக்கும் சில ஜியோ கஸ்டமர்களுக்கு தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இது சரி செய்யப்பட்டுவிட்டது. ஜியோவின் தடையற்ற சேவைகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளன. சந்தாதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்திருந்தது.

ஆகவே, மும்பையில் சேவைகள் பாதிக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியது. இந்த நேரத்தில், மும்பையில் சேவை பாதிக்கப்பட்ட ஜியோ கஸ்டமர்களுக்கு 2 நாட்கள் இலவச சேவை வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எக்ஸ் தளத்திலும் பல்வேறு கஸ்டமர்கள் 2 நாட்கள் இலவச சேவை தொடர்பான எஸ்எம்எஸ் தங்களுக்கு வந்ததாக பதிவிட்டுள்ளனர்.

ஆகவே, மும்பையில் இருக்கும் சில கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த இலவச சேவை வழங்கப்படுவது தெரிகிறது. இந்த சேவையானது, ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள திட்டத்தில் கூடுதலாக 2 நாட்களுக்கு சேவைகளை கொடுக்கிறது. ஆகவே, மும்பையில் இருக்கும் ஜியோ கஸ்டமர்களை தவர மற்ற பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

சொல்லப்போனால், நெட்வொர்க் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மட்டுமே இந்த இலவச சேவையை பற்றி யேசிக்கலாம். மற்றபடி வழக்கமான கஸ்டமர்கள் இதுபோன்ற சலுகைகளை நம்ப வேண்டாம். ஆனால், ஜியோ ஏஃர்பைபர் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஒரு வருடத்துக்கான மொபைல் ரீசார்ஜ் வழங்கப்படுவது உண்மையான செய்திதான்.

ஜியோ ஏர்ஃபைபர் ஆஃபர்: வை-பை டேட்டா, லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள், ஓடிடி மற்றும் டிவி சேனல்கள் சலுகைகளை கொடுக்கும் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களை பெறும் கஸ்டமர்களுக்கு ரூ.3599 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் ரூ.599 முதல் தொடங்குகின்றன.

ஆனால், இந்த திட்டங்களை முதலில் பெறும் போது, குறைந்தது 3 மாதங்களுக்கான தொகையை முழுவதும் செலுத்த வேண்டும். அதாவது, ஒரு மாதத்துக்கு ரூ.599 எனில் மூன்று மாதத்துக்கு ரூ.1,797 ஆக செலுத்த வேண்டும். இதுபோக ஜிஎஸ்டி மற்றும் இன்டாலேஷன் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த திட்டங்களை பெற ஜியோ சிம் கார்டு வைத்திருக்க வேண்டும்.

ஜியோ ஸ்டோர், ஜியோ வெப்சைட் மற்றும் ஜியோ ஆப் ஆகிவற்றில் இந்த ஏர்ஃபைபர் திட்டங்களை புக்கிங் செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கான கட்டணத்தை முழுவதும் செலுத்தி பெற்றுவிட்ட பிறகு அதே நம்பருக்கு ரூ.3599 மதிப்பிலான வருடாந்திர திட்டம் இலசமாக கொடுக்கப்படும். இதில் 2.5 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Offers 2 Days Free Services To Mumbai Users Due To Network Outage is it True
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X