Home
News

அம்பானியின் அடுத்த ஆஃபர்.. 10 பைசா செலவு இல்லாம 15-30 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி.. எந்தெந்த திட்டங்களில்?

அட்டகாசமான விலையில் புதிய ஓராண்டு ரீசார்ஜ் திட்டத்தை (Annual Plan) அறிமுகம் செய்த கையோடு, முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, சத்தம் இல்லாமல் இன்னொரு இலவச சலுகையையும் (Free Offer) வழங்கி வருகிறது.

நினைவூட்டும் வண்ணம் சில தினங்களுக்கு முன்னர் சுதந்திர தினம் 2023 ஆஃபர் (Independence Day 2023 Offer) என்கிற பெயரின் கீழ் ரூ.2999 மதிப்பிலான ஓராண்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது டெய்லி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ் உட்பட பல வகையான சலுகைகளை வழங்குகிறது.

Jio ஆஃபர்.. 10 பைசா செலவு இல்லாம 15-30 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி!

பலரும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை ஆர்வமாக ரீசார்ஜ் செய்து வரும் வேளையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ஜியோஃபைபர் (JioFiber) சேவையின்கீழ் 15 முதல் 30 நாட்கள் வரையிலான கூடுதல் வேலிடிட்டியை (Extra Validity) வழங்கும் இலவச சலுகையையும் வழங்கி வருகிறது.

ஜியோவின் கூற்றுப்படி, 6 மாதங்கள் செல்லுபடியாகும் அரையாண்டு திட்டத்தை (Semi-annual Plan) தேர்வு செய்யும் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு, 6 மாத காலத்திற்கு பின்னர் முற்றுலும் இலவசமாக 15 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி கிடைக்கும். இந்த இலவச சலுகையானது, நீங்கள் தேர்வு செய்யும் எந்தவொரு திட்டத்தின் விலை மற்றும் இண்டர்நெட் ஸ்பீடையும் (Internet Speed) பொருட்படுத்தாமல், அனைத்து திட்டங்களிலும் கிடைக்கும்.

இதேபோல நீங்கள் வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்யும்போது, உங்களுக்கு கூடுதலாக 30 நாட்கள் இலவச வேலிடிட்டி கிடைக்கும். அதாவது நீங்கள் 12 மாதங்களுக்கு பணம் செலுத்தி 13 மாதங்களுக்கான சேவையை பெறுவீர்கள். இதுவும் நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தின் விலை மற்றும் இண்டர்நெட் ஸ்பீடை பொருட்படுத்தாமல் அனைத்து திட்டங்களிலும் கிடைக்கும்.

வழக்கம் போல இந்த இலவச சலுகையும் கூட ஜியோவின் வியாபார தந்திரங்களில் (Business tactics) ஒன்றாகும். 10 பைசா செலவு இல்லாமல் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும் என்பதால், ஜியோஃபைபர் வாடிக்கையாளர்கள் நீண்ட கால திட்டங்களை தேர்வு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். இதன்மூலம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை ஜியோஃபைபர் சேவையின் கீழ் நீண்ட காலத்திற்கு 'லாக்' (Lock) செய்யப்படுவார்கள்.

நினைவூட்டும் வண்ணம், ஜியோஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் ப்ரீபெய்ட் பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது நான்கு வெவ்வேறு வேலிடிட்டிகளில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது: மாதாந்திர வேலிடிட்டி (1 மாதம்), காலாண்டு வேலிடிட்டி (3 மாதம்), அரை ஆண்டு வேலிடிட்டி (6 மாதம்) மற்றும் வருடாந்திர வேலிடிட்டி (12 மாதம்).

ஜியோஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் 1 மாத கால மற்றும் 3 மாத கால திட்டங்களின் கீழ் எந்தவிதமான கூடுதல் வேலிடிட்டியோ அல்லது இலவச சலுகையோ கிடைக்கவில்லை. 6 மாத கால மற்றும் 12 மாத கால திட்டங்களின் கீழ் மட்டுமே இலவச கூடுதல் வேலிடிட்டி நன்மை கிடைக்கிறது.

ஜியோஃபைபர் சேவையின் கீழ் 30எம்பிபிஎஸ் (30Mbps) முதல் 1ஜிபிபிஎஸ் (1Gbps) வரையிலான இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் பல்வேறு வகையான திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஓடிடி (OTT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஓவர்-தி-டாப் நன்மைகளையும், ஜியோ செட்-டாப் பாக்ஸையும் (Jio Set Top Box) இலவசமாக வழங்கும் திட்டங்களும் கூட ஜியோஃபைபரின் கீழ் உள்ளன.

ஒருவேளை நீங்கள் இனிமேல் தான ஜியோஃபைபர் சேவையின் கீழ் இணைய உள்ள புதிய வாடிக்கையாளர் (New Customer) என்றால், உங்களுக்கான புதிய இணைப்பை முன்பதிவு செய்ய, ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (Jio Official Website) செல்லவும் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள ஜியோ ரீடெய்ல் ஸ்டோரை (Jio Retail Store) அணுகவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offers 15 to 30 Days Additional Validity For JioFiber Users Whose Choosing 6 or 12 months option
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X