Home
News

ஜியோ சிம் வைத்திருப்பவர்களுக்கு டபுள் டேட்டா.. 120 ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா.. லைவ் டிவிஸ், ஓடிடி சந்தா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் குறிப்பிட்ட திட்டங்களில் எந்த கட்டணமும் இல்லாமல் கூடுதலாக டேட்டா கொடுக்கப்படுகிறது. இதனால், ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் கூடுதல் டேட்டா கொடுக்கும் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய ஆரவம் காட்டி வருகின்றனர். இதில் 365 நாட்களுக்கு கூடுதல் டேட்டாவை கொடுக்கும் திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.

ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கிடைக்கும். தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களாக இருப்பதால், மொத்தம் 1032.5ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

ஜியோ சிம் வைத்திருப்பவர்களுக்கு டபுள் டேட்டா.. 120 ஜிபி எக்ஸ்ட்ரா!

ஆனால், இது 4ஜி வேகத்தில் மட்டுமே கிடைக்கும். ஆகவே, 2.5 ஜிபி முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். ஒருவேளை 5ஜி கஸ்டமர்களுக்கு இந்த 2.5 ஜிபி கணக்கில் இல்லாமலேயே அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படும். இப்போது, கூடுதல் டேட்டாவுக்கு வரலாம். இந்த 120 ஜிபி கூடுதல் டேட்டாவை இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கும்.

12 மாதங்கள் வேலிடிட்டி கிடைப்பதால், ஒவ்வொரு மாதமும் 10ஜிபி டேட்டா வீதம் கொடுக்கப்படும். ஆகவே, மொத்தமாக 120 ஜிபி கூடுதல் டேட்டாவாக கிடைக்கும். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கும். இப்போது, கூடுதலாக கிடைக்கும் மற்ற சலுகைகளுக்கு வருவோம். ஜியோஹாட்ஸ்டார் : மொபைல் (JioHotstar: Mobile) சந்தா கிடைக்கிறது.

ஜியோ சிம் வைத்திருப்பவர்களுக்கு டபுள் டேட்டா.. 120 ஜிபி எக்ஸ்ட்ரா!

ஜியோ டிவி ப்ரோ பேக் (JioTV Pro Pack) இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, ஜியோ டிவி (JioTV) வழியாக 12 மாதங்களுக்கும் தலா ரூ.55 மதிப்பிலான ஜியோ டிவி ப்ரோ பேக் கொடுக்கப்படும். மொத்தம் 12 வவுச்சர்களாக இதை பயன்படுத்தலாம். இதில் 1000+ டிவி சேனல்களை பயன்படுத்தி கொள்ள முடியும். ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) கிடைக்கிறது.

இதில் 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படும். 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா மற்றும் பல சலுகைகளை கொண்ட ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினியின் (Google Gemini) 18 மாத இலவச ப்ரோ சந்தாவை இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. மேலும், கூடுதலாக வவுச்சர்கள் கொடுக்கப்படும். மைஜியோ ஆப்பில் இருக்கும் கூப்பன்களில் இதை அணுகலாம்.

ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) வவுச்சர்கள் வழியாக விமான டிக்கெட்டில் ரூ.2,200 வரையிலான தள்ளுபடியை இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கும். அஜியோ (AJIO) வவுச்சர் வழியாக ரூ.1000 ஷாப்பிங் செய்தால் ரூ.200 தள்ளுபடி கொடுக்கப்படும். சினிபொலிஸ் (Cinépolis) வவுச்சர் வழியாக ரூ.150 தள்ளுபடி கிடைக்கும் (குறைந்தது ரூ.550, 2 டிக்கெட்டுகளை புக் செய்ய வேண்டும்).

செவ்வாய் கிழமைகளில் இந்த வவுச்சர் செல்லாது. ரூ.1590 மதிப்புள்ள 12 மாத கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) சந்தாவும் கொடுக்கப்படும். ஜியோ டிவி ப்ரோ பேக்கில் ஜியோஸ்டார் (JioStar), சோனி எண்டர்டெயின்மெண்ட் (Sony Entertainment), சன்டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ்.டிஸ்கவரி (Warner Bros. Discovery) மற்றும் ஈடிவி (ETV) நிறுவனங்களில் சேனல்கள் கிடைக்கும்.

இதில் ஸ்டார் பிளஸ் எச்டி (Star Plus HD), கலர்ஸ் எச்டி (Colors HD), சன் டிவி நெட்வொர்க்கில் சன் டிவி எச்டி (Sun TV HD), கேடிவி எச்டி (KTV HD) சேனல்கள் கிடைக்கும். டிஸ்கவரி சேனல் (Discovery Channel), அனிமல் பிளானட் (Animal Planet) கிடைக்கும். மேலும் ஈடிவி எச்டி (ETV HD), ஈடிவி தெலுங்கு (ETV Telugu) சேனல்களும் இந்த திட்டத்தில் கொடுக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Jio Offers 120GB Extra Data With Rs 3599 Plan Check Live TVs And OTT Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X