Jio-வின் அப்படி போடு திட்டம்! ரூ.61 விலையில் 10ஜிபி டேட்டா நன்மையா? எப்படி, எங்கே ரீசார்ஜ் செய்வது?
குறைந்த விலையில் அதிக டேட்டா வேண்டுமா? அப்படியானால், கட்டாயமாக ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்கள் இந்த திட்டத்தை தெரிந்துகொள்ள வேண்டும். வெறும் 61 ரூபாய் செலவில் உங்களுக்கு 10ஜிபி அதிவேக டேட்டா கிடைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கே.
ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் வடிக்கையாளர்களுக்காக பல விலைகளில், பல விதமான நன்மைகளுடன், பல ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் பல நன்மைகள் கிடைத்தாலும், மக்களின் பார்வையும், கவனமும் டேட்டா நன்மைகளின் மீது மட்டுமே அதிகமாக இருக்கிறது. உண்மையை சொல்ல போனால், நமக்கு டேட்டாவின் தேவை தான் அதிகமாக தேவைப்படுகிறது.

குறிப்பாக, தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, தேவைப்படும் டேட்டாவை பற்றி தான் எல்லோருக்கும் கவலை இருக்கிறது. இப்படி, தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல், நள்ளிரவு 12 மணி ஆகும் வரை காத்திருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், கட்டாயம் ஜியோ வழங்கும் ரூ.61 திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
இது ப்ரீபெய்ட் பயனர்களுக்கான ஒரு டேட்டா பேக் திட்டமாகும். இந்த திட்டம் முதலில் வேறொரு நன்மையுடன் கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனர்களின் தேவையை அறிந்து, இந்த திட்டத்தில் நிறுவனம் இப்போது சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு, ஜியோவின் இந்த ரூ.61 திட்டமானது 6ஜிபி டேட்டா நன்மையுடன் வந்தது. இப்போது இந்த திட்டத்தில் நிறுவனம் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
முன்பு இந்த ரூ.61 திட்டத்துடன் வழங்கப்பட 6ஜிபி டேட்டா நன்மை இப்போது 10ஜிபி டேட்டா நன்மையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் படி, இனி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.61 விலையில் முழுமையாக 10ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது உண்மையில், ஜியோ பயனர்களுக்கு கிடைத்த லக்கி சான்ஸ் என்றே கூறலாம். இந்த ரூ.61 டேட்டா பேக் திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில், இது உங்கள் அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி உடன் செயல்படுகிறது.

உங்களுடைய வழக்கமான பேக்குகளின் தினசரி டேட்டா லிமிட் தீர்ந்துவிட்டால், இந்த டேட்டா பேக்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நள்ளிரவில் உங்கள் டேட்டா வரவு வைக்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதும் இதில் கவனிக்கத்தக்கது. அதேபோல், இந்த 10 ஜிபி டேட்டா முழுமையாக பயன்படுத்தக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, வரம்பு எதுவுமின்றி இதை நீங்கள் உங்கள் விருப்பம் போல பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜியோ நிறுவனம் இது போல பல டேட்டா பேக்குகளை வழங்கினாலும், இந்த திட்டம் குறைந்த விலையில் உங்களுக்கு தேவையான டேட்டாவை வழங்குகிறது. IPL ரசிகர்கள், OTT ரசிகர்கள் என்று பலதரப்பட்ட பயனர்களுக்கு இந்த டேட்டா திட்டம் உகந்தது. எந்த சிக்கலும் இன்றி, டேட்டாவை தடையின்றி பயன்படுத்த நீங்கள் விரும்பினால், இந்த ரூ.61 டேட்டா திட்டத்தை உடனே ரீசார்ஜ் செய்து பயன்பெறுங்கள். இந்த ரீசார்ஜ் திட்டம் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Jio Apps வழியாக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








