இனி கேபிள் டிவி எதுக்கு? மலிவு விலையில் 1000+ TV சேனல்கள் வழங்கும் இரண்டு Jio திட்டங்கள்.. விட்றாதீங்க..
ஜியோ நிறுவனம் தற்போது லைவ் சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆரவம் காட்டுகிறது. சமீபத்தில் கூட மலிவு விலையில் 1000 லைவ் டிவி சேனல்கள் வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. குறிப்பாக இது போன்ற திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய தான் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் 1000 லைவ் சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தா தரும் இரண்டு கம்மி விலை திட்டங்களை வழங்குகிறது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.200 திட்டம் (Jio Rs 200 Plan) ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.
அதேபோல் இந்த சேனல்களை ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஆப்களில் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த லைவ் சேனல்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதுவும் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக ஜியோவின் ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.
ஜியோவின் ரூ.55 திட்டம் (Jio Rs 55 Plan) ஆனது ஓடிடி சந்தா நன்மையை வழங்காது. ஆனால் 1000 பிளஸ் லைவ் சேனல்களை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) வழியாக சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் ((Warner Bros) டிஸ்கவரி Discovery), ஈடிவி (ETV) போன்ற 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்க்கலாம்.

இந்த ஜியோ ரூ.55 திட்டம் ஆனது எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.
மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications