நெட்வொர்க்கில் ஏற்பட்ட திடீர் கோளாறை ஈடுசெய்யும் வகையில் ஜியோ பயனர்களுக்கு அன்லிமிடெட் சலுகை.!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் பல பகுதிகளில் இயங்காமல் போனது. குறிப்பாக ஜியோ பயனர்கள் கால் அழைப்புகள் மற்றும் இணைய சேவையில் இடையூறை சந்தித்தனர்.

ஜியோவின் நெட்வொர்க் பிரச்சனை

குறிப்பாக ஜியோவின் நெட்வொர்க் பிரச்சனை மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பரவலாக ஏறப்பட்டது என்று கூறப்படுகிறது. பின்பு இந்த நெட்வொர்க் பிரச்சனையை ஒருவழியாக ஜியோ நிறுவனம் சரி செய்துவிட்டதாக தெரிவித்தது. மேலும் நெட்வொர்க்கில் ஏற்பட்ட திடீர் கோளாறை ஈடுசெய்யும் வகையில்,ஜியோ சார்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இரண்டு
நாட்களுக்கு அன்லிமிடெட் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் வரம்பற்ற சலுகை குறித்த

அதன்படி இரண்டு நாள் வரம்பற்ற சலுகை குறித்த விவரம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் தற்போதைய சலுகை நிறைவுற்றதும், இரண்டு நாட்களுக்கான வரம்பற்ற சலுகை வழங்கப்படும். எனவே 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

புதுசா ஒன்பிளஸ் 5ஜி போன் வாங்க ரெடியா? பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த மாடலை மிஸ் பண்ணிடாதீங்க..புதுசா ஒன்பிளஸ் 5ஜி போன் வாங்க ரெடியா? பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த மாடலை மிஸ் பண்ணிடாதீங்க..

இந்நிறுவனம் விரைவில் ஜியோபோன்

அதேபோல் இந்நிறுவனம் விரைவில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதாவது குறைந்த விலையில் தரமான அம்சங்களடன் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோ இ 40 இந்திய அறிமுகம் உறுதியானது.. தேதி இது தான்.. பட்ஜெட் விலையில் வாங்க நல்ல போனா இருக்குமா?மோட்டோ இ 40 இந்திய அறிமுகம் உறுதியானது.. தேதி இது தான்.. பட்ஜெட் விலையில் வாங்க நல்ல போனா இருக்குமா?

 வெளியிடுவதை தாமதப்படுத்தியது

கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் விற்பனை தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி தீபாவளிக்கு முன்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வெளியாகும்என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிப்செட்களின் பற்றாக்குறையால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வெளியிடுவதை தாமதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி கூகுள் பே செயலியில் இதையும் செய்யலாம்- வந்தது புதிய அம்சம்., கிரெடிட் கார்ட் வச்சுக்கிட்டு அலைய வேணாம்!இனி கூகுள் பே செயலியில் இதையும் செய்யலாம்- வந்தது புதிய அம்சம்., கிரெடிட் கார்ட் வச்சுக்கிட்டு அலைய வேணாம்!

 5.5-இன்ச் டிஸ்பிளே அல்லது 6-இன்ச் எச்டி டிஸ்பிளே வ

வெளிவந்த தகவலின்படி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் டிஸ்பிளே அல்லது 6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 1440x720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்கமெமரி வசதியைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்- விண்கலத்தை அனுப்பி சிறுகோளை திசை திருப்பும் நாசா: டார்ட் ஆரம்பம்!பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்- விண்கலத்தை அனுப்பி சிறுகோளை திசை திருப்பும் நாசா: டார்ட் ஆரம்பம்!

க ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி

குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் வசதி, 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.கண்டிப்பாக இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன்
இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Source: financialexpress

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio offering two day unlimited offer: What is the reason?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X