Home
News

அடிச்சு புடிச்சு ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்ஸ்.. Jio அறிவித்துள்ள 2 ட்ரையல் பிளான்.. 100ஜிபி டேட்டா.. என்ன விலை?

"யார் சாமி இவன்.. இவ்ளோ நான் எங்க இருந்தான்" என்று கேட்கத்தூண்டும் படியான 2 ட்ரையல் பிளான்களை அதாவது சோதனை திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ (Relaince Jio) நிறுவனம் அறிவித்துள்ளது. அதென்ன திட்டங்கள்? விலை நிர்ணயம் என்ன? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சோதனை முடிந்த பிறகு என்னவாகும்? இதோ விவரங்கள்:

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது போஸ்ட்பெய்ட் (Postpaid) வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் (30 Days Validity) இரண்டு ட்ரையல் பிளான்களை (Trial Plans) அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் ரூ.399 மற்றும் ரூ.699 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.

Jio அறிவித்துள்ள 2 ட்ரையல் பிளான்.. 100ஜிபி டேட்டா.. என்ன விலை?

ட்ரையல் திட்டங்கள் என்றால் என்ன? நீங்கள் ஜியோவின் போஸ்ட்பெய்ட் சேவைக்குள் நுழைய விரும்புகிறீர்கள் என்றால்.. ஆனால் அது நன்றாக இருக்குமா, இருக்காதா? என்கிற சந்தேகம் உங்களுக்கு இருந்தால்.. குறிப்பாக நீங்கள் வசிக்கும் பகுதியில் ஜியோ மொபைல் போஸ்ட்பெய்ட் சேவைகள் எப்படி இருக்கிறது? என்கிற தெளிவை பெற விரும்பினால்.. இந்த 2 திட்டங்களும் 200% உங்களுக்கானது தான்!

30 நாட்கள் என்கிற சோதனை காலத்திற்குப் பிறகு, ஜியோவின் மொபைல் போஸ்ட்பெய்ட் சேவைகளை தொடரலாமா? அல்லது வேண்டாமா? என்கிற முடிவை பயனர்களாகிய நீங்களே முடிவு செய்யலாம். சரி வாருங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 மற்றும் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்த்து விடலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டமானது மொத்தம் 75ஜிபி டேட்டாவுடன் (75GB total data) வருகிறது. அதன் பிறகு, நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

ரூ.399 திட்டத்தின் கீழ் 3 ஆட்-ஆன் கனெக்ஷன்கள் வரை கிடைக்கும். இந்த சிம்கள் ஒவ்வொன்றும் மாதத்திற்கு 5ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். டேட்டா நன்மைகளை போல் இல்லாமல் வாய்ஸ் கால் நன்மைகள் ஆனது அன்லிமிடெட் ஆக இருக்கும். எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு கூடுதல் சிம்மிற்கும் நீங்கள் மாதம் ரூ.99 செலுத்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.399-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து 5ஜி அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெறும் தகுதியை பெறுவார்கள். மேலும் ஜியோ சினிமா (JioCinema) ஜியோக்ளவுட் (JioCloud) மற்றும் ஜியோடிவி (JioTV) ஆகியவற்றுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும்..

ரிலையன்ஸ் ஜியோ ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது 100ஜிபி மாதாந்திர டேட்டாவுடன் (100GB total data) வருகிறது. மேலும் ரூ.399 திட்டத்தை போலவே, நீங்கள் கூடுதலாக பயன்படுத்தும் ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

இந்த திட்டத்திலும் நீங்கள் 3 ஃபேமிலி சிம்கள் (3 Family SIMs) வரை பெறுவீர்கள்; அதாவது மூன்று ஆட்-ஆன் கனெக்ஷன்களை பெறுவீர்கள். மேலும் ஒவ்வொரு சிம்களுக்கும் 5ஜிபி டேட்டா கிடைக்கும். ஜியோவிடம் இருந்து நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சிம்மிற்கும் மாதம் ரூ.100 செலுத்த வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.399-ஐ போலவே இதுவும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழும் கூட அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெறும் தகுதி உங்களுக்கு கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் (Amazon Prime), ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோக்ளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான இலவச சந்தாக்கள் கிடைக்கும். அவைகளில் அமேசான் ப்ரைம் ஆனது 1 ஆண்டுக்கான சந்தாவாகும்; நெட்பிளிக்ஸ் ஆனது பேஸிக் பிளானாக (Basic Plan) இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offering 30 Days Trial Plan For Rs 399 and Rs 699 to trying out Its Mobile Postpaid Services
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X