Jio Recharge.. 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. சூப்பரான 2 திட்டங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க..
ஜியோ (jio) நிறுவனம் இப்போதும் கூட எக்ஸ்ட்ரா டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை பட்ஜெட் விலையில் வழங்கி வருகிறது. ஆனால் ஏர்டெல், வோடபோன் ஐடியா, போன்ற நிறுவனங்களிடம் பட்ஜெட் விலையில் எக்ஸ்ட்ரா டேட்டா தரும் திட்டங்கள் இல்லை. தற்போது ஜியோ வழங்கும் அந்த எக்ஸ்ட்ரா டேட்டா திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) ஆனது தினசரி தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் கூடுதலாக 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar)சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்.
அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட சலுகைகள் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர பல சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளன.
மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட அம்சங்கள் இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் பல சிறப்பான சலுகைகளும் உள்ளன. ஒருவேளை கம்மி விலையில் அதிக ஓடிடி சந்தா வேண்டும் என நினைக்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.445 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.
ஜியோ நிறுவனத்தின் ரூ 445 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 445 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆகவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) போன்ற 10 முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். இதுதவிர மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் உள்ளது.
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட சலுகைகள் ஜியோ நிறுவனத்தின் ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








