மூன்று திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கிய ஜியோ நிறுவனம்.!

|

சமீபத்தில் ஜியோ நிறுவனம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த திட்டங்கள் ஐபிஎல் போட்டிகளை காண வசதியாக இருக்கும் என்றே கூறலாம். மேலும் ஜியோ அறிமுகம் செய்த புதிய திட்டங்கள் வரம்பற்ற கால் அழைப்பு நனமைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்களுக்கான
இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரீசாரஜ் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மை

தற்போது வெளிவந்த தகவலின்படி ஜியோ நிறுவனம் அதன் புதிய ரீசாரஜ் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையைவழங்கியுள்ளது. கூடுதல் டேட்டா நன்மை கிடைக்கும் திட்டங்கள் ரூ.499, ரூ.888 மற்றும் ரூ.2,599 ஆகும். குறிப்பாக ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடுதல் டேட்டா நன்மையும் கிடைப்பதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜியோ நிறுவனம் கூடுதல் டேட்டா

தற்போது ஜியோ நிறுவனம் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குவதற்கு காரணம் என்னவென்றால், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களும் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. எனவே அதற்கு போட்டியாக ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கியுள்ளது.

வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.5 லட்சம்:அதுக்கு' நான் பொறுப்பில்லை: இளைஞர் செய்தது இதுதான்.!வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.5 லட்சம்:அதுக்கு' நான் பொறுப்பில்லை: இளைஞர் செய்தது இதுதான்.!

 ஜியோ ரூ.499 திட்டம்

ஜியோ ரூ.499 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.499 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்களுடன் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர 6ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா நன்மை இந்த திட்டத்தில்
கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 எம்பி கேமராவுடன் மலிவு விலையில் Realme C25Y ஸ்மார்ட்போன் அறிமுகம்.! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!50 எம்பி கேமராவுடன் மலிவு விலையில் Realme C25Y ஸ்மார்ட்போன் அறிமுகம்.! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!

ஜியோ ரூ.888 திட்டம்

ஜியோ ரூ.888 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.888 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர ரூ.888 திட்டத்தில் 5ஜிபி அளவிலான கூடுதல்டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..

ஜியோ ரூ.2599 திட்டம்

ஜியோ ரூ.2599 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.2599 திட்டம் ஆனது ஒரு ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக ரூ.2599 திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர 10ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு போட்டியாக சியோமி அறிமுகம் செய்த Xiaomi 11T, Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன்..ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு போட்டியாக சியோமி அறிமுகம் செய்த Xiaomi 11T, Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன்..

து அறிவிக்கப்பட்ட கூடுதல்

குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் டேட்டா சலுகையானது எந்த விதமான டெய்லி லிமிட்டையும் கொண்டிருக்காது என்று கூறப்படுகிறது. குறிப்பாக மெயின் ரீசார்ஜ் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். மேலும் ஜியோ நிறுவனத்தின் ரூ.666 மற்றும் ரூ.549 திட்டங்களின்
நன்மைகளைப் பார்ப்போம்.

Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro போன்களின் அறிமுகத்தை லைவ் பார்ப்பது எப்படி? இது வீடியோ லிங்க் உள்ளே..Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro போன்களின் அறிமுகத்தை லைவ் பார்ப்பது எப்படி? இது வீடியோ லிங்க் உள்ளே..

ஜியோ ரூ.666 திட்டம்

ஜியோ ரூ.666 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.666 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகின்றன. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்களுடன்
ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

நோக்கியா சி01 பிளஸ், நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.! ஆரம்ப விலை ரூ.5,999 மட்டுமே.!நோக்கியா சி01 பிளஸ், நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.! ஆரம்ப விலை ரூ.5,999 மட்டுமே.!

 ஜியோ ரூ.549 டேட்டா ஆட்-ஆன் பேக்

ஜியோ ரூ.549 டேட்டா ஆட்-ஆன் பேக்

ஜியோவின் ரூ.549 டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. பின்பு இந்த சிறப்பு திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக ரூ.549 டேட்டா ஆட்-ஆன் பேக் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio offered additional data on three plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X