Home
News

அசர வைக்கும் விலையில்.. Jio-வின் 14 நாள் ரீசார்ஜ் திட்டம்.. டெய்லி எவ்ளோ டேட்டானு சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!

பெரும்பாலான ஜியோ வாடிக்கையாளர்கள் 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரீசார்ஜ் திட்டங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றன. அதற்கு ஏற்றாற்போல முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவும் பெரும்பாலான திட்டங்களில் மேற்கண்ட 3 வகையான வேலிடிட்டியையே வழங்குகிறது.

இதன் விளைவாக 14 நாட்கள் என்கிற வேலிடிட்டி (14 Days Validity) உடன் வரும் ஒரு அட்டகாசமான ஜியோ திட்டத்தை, நம்மில் பலரும் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். அதென்ன திட்டம்? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தின் மீது ஜியோவின் அன்லிமிட்ட் 5ஜி டேட்டா நன்மை கிடைக்குமா? இதோ விவரங்கள்:

அசர வைக்கும் விலையில்.. Jio-வின் 14 நாள் ரீசார்ஜ் திட்டம்!

என்ன திட்டம்? நாம் இங்கே பேசுவது ரூ.219 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் பிளானை (Jio Rs.219 Prepaid Plan) பற்றித்தான். இது 2 வாரங்கள் அல்லது 14 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. டேட்டா நன்மைகளை பொறுத்தவரை, இது தினமும் 3ஜிபி டேட்டாவை (Daily 3GB Data) வழங்கும். கூடுதலாக இந்த திட்டத்துடன் ரூ.25 மதிப்புள்ள 2ஜிபி டேட்டா பேக்கும் இலவசமாக (2GB Extra Data) கிடைக்கும்.

இப்படியாக ஜியோவின் ரூ.219 திட்டத்தின் கீழ் மொத்தம் 44ஜிபி டேட்டா கிடைக்கும். டேட்டா நன்மையை தவிர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Daily 100 Free SMS) போன்ற வழக்கமான நன்மைகளும் அணுக கிடைக்கும்.

அசர வைக்கும் விலையில்.. Jio-வின் 14 நாள் ரீசார்ஜ் திட்டம்!

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) சேவைக்கான இலவ சந்தாக்களும் கிடைக்கும். ஜியோ சினிமா சந்தாவின் கீழ் நிறுவனத்தின் கட்டண சேவையான ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium) நன்மைகள் எதுவும் கிடைக்காது; வெறுமனே ஜியோ சினிமாவின் கீழ் கிடைக்கும் நன்மைகள் மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமாக 14 நாட்கள் வேலிடிட்டி உடன் வந்தாலும் கூட ரூ.219 திட்டமானது, ஜியோவின் அன்லிமிட்ட் 5ஜி டேட்டா நன்மை (Unlimited 5G Data Benefit) உடன் வருகிறது. இதன்கீழ் தகுதியுள்ள (5ஜி ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் மற்றும் ஜியோவின் 5ஜி சேவைகள் அறிமுகமான பகுதியில் வாசிக்கும்) ஜியோ வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வரம்பற்ற 5ஜி டேட்டா அணுக கிடைக்கும்.

அசர வைக்கும் விலையில்.. Jio-வின் 14 நாள் ரீசார்ஜ் திட்டம்!

ஒருவேளை நீங்கள் ரூ.219-ஐ விட மலிவான விலையில்.. அதே சமயம் குறைந்த நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்கும் உள்ள ஒரு திட்டத்தை தேடினால்.. ரூ.149 ப்ரீபெய்ட் பிளானை (Jio Rs.149 Prepaid Plan) ரீசார்ஜ் செய்யலாம். இது 20 நாட்கள் என்கிற வேலிடிட்டி (20 Days Validity) உடன் வருகிறது. டேட்டா நன்மையை பொறுத்தவரை, இது தினமும் 1ஜிபி டேட்டா என மொத்தம் 20ஜிபி டேட்டாவை வழங்கும்.

இதுதவிர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் சேவைக்கான இலவ சந்தாக்கள் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது. ஆனால் ரூ.219 உடன் வரும் அன்லிமிட்ட் 5ஜி டேட்டா நன்மையானது ரூ.149-ல் சேர்க்கப்படவில்லை.

ஜியோ ரீசார்ஜின் கீழ் கிடைக்கும் சமீபத்திய சலுகைகளை பொறுத்தவரை, ரூ.4489 ரீசார்ஜ் மீது78ஜிபி இலவச டேட்டா ஆபர் (78GB Extra Data Offer) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் எல்லா பயனர்களுக்குமே (டெய்லி டேட்டா நன்மையை சேர்க்காமல்) கூடுதலாக 78ஜிபி டேட்டா முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offer Rs 25 Worth Extra Data with Rs 219 Along with Daily 3GB Data for 14 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X