அடுத்து வருது.. இப்பவே பண்ணிடுங்க.. ரூ.1299-க்கு முடிஞ்சது.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. வேலிடிட்டி?
ஜியோ (Jio) கஸ்டமர்கள் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் நெட்பிளிக்ஸ் சந்தா திட்டத்துக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஸ்க்விட் கேம் சீசன் 2 (Squid Game Season 2) வெளியாக இருக்கிறது. ஆகவே, இப்போது எந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். 2 திட்டங்களில் மட்டுமே நெட்பிளிக்ஸ் சந்தா (Netflix Subscription) கிடைக்கிறது. இந்த ஓடிடி திட்டங்களின் (OTT Plan) விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ கஸ்டமர்களுக்கு ரூ.1299 மற்றும் ரூ.1799 விலை கொண்ட திட்டங்களில் நெட்பிளிக்ஸ் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகள் வருகின்றன. மற்ற சலுகைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால், நெட்பிளிக்ஸ் சந்தாவில் அப்படி கிடையாது. ஆகவே, அதை கவனிக்க வேண்டும்.

முதலில் ஜியோ ரூ.1299 திட்டம் (Jio Rs.1299 Plan) கொடுக்கும் சலுகைகளை தெரிந்து கொள்வோம். இந்த ப்ரீயெட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தா கிடைக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் (STD Voice Calls) இதற்கு பொருந்தும்.
அதேபோல ரோமிங் கால்களும் (Roaming Calls) கிடைக்கிறது. ஓடிடி சந்தா கிடைப்பதால், டேட்டா சலுகையும் கூடுதலாக இருக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டாவை நாள்தோறும் பயன்படுத்தலாம். இதற்கு பின் 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா வேகம் குறைக்கப்படும். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைப்பதால், கவலை இருக்காது.
இப்போது, ஓடிடி சந்தாவுக்கு வருவோம். இந்த ஜியோ திட்டத்தில் நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தா கிடைக்கும். சிங்கிள் டிவைஸ் ஸ்ட்ரீமிங்கில் மொபைலில் மட்டும் நெட்பிளிக்ஸ் பார்க்க வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். மற்ற சலுகைகளாக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) சந்தா கிடைக்கிறது.
மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆப்களையும் பயன்படுத்தலாம். ஒருவேளை நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தாவுடன் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ஜியோ ரூ.1799 திட்டம் (Jio Rs.1799 Plan) உங்களுக்கு பக்காவாக இருக்கும். இந்த திட்டத்தில் மற்ற சலுகைகள் எப்படி இருக்கிறது? இதிலும் 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.
ஆனால், டேட்டாவுக்கு பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. ஏனென்றால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடியும். ஆகவே, 84 நாட்கள் முழுவதும் 252 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (64 Kbps Post Data) கிடைக்கிறது.
4ஜி டேட்டாவே (4G Data) குறையில்லாமல் இருப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு பக்காவான தேர்வாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பார்க்க முடிகிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்த சலுகைகள இதற்கும் பொருந்துகிறது. அதன்படி உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் கால்களும், எஸ்டிடி கால்களும் கிடைக்கிறது. மேலும் ரோமிங் கால்களும் செய்து கொள்ள முடிகிறது.
அதே நேரத்தில் 100 எஸ்எம்எஸ்களை தினமும் அனுப்பி கொள்ளலாம். ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகளையும் 84 நாட்களுக்கு கிடைக்கிறது. இப்போடி 2 திட்டங்களிலும் நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் மற்ற சலுகைகளும் குறையில்லாமல் பேக் செய்யப்பட்டுள்ளன. சீசனுக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இதில் ஏதாவது ஒரு திட்டத்துக்கு செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications