Home
News

ஜியோ அதிரடி: ஐபில்-காக 8ஜிபி இலவச டேட்டா: பெறுவது எப்படி.?

ஐபிஎல் கிரிக்கெட் சீஸனின் இறுதி நாள், நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியோடு முடிகிறது.

By Muthuraj

ஐபிஎல் கிரிக்கெட் சீஸனின் இறுதி நாள், நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியோடு முடிகிறது. இந்த ஐபில் 2018-ஐ இன்னும் சிறப்பானதாக மாற்ற, முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ, தனது பயனர்களுக்கு ஜியோ ஐபில் 2018 எனும் பெயரின் கீழ் காம்ப்ளிமெண்ட்ரி டேட்டா தொகுப்பை அறிமுகம் செய்ததை நாம் அறிவோம்.

அந்த திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், நாள் தோறும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது. ரூ.251/- என்கிற மதிப்பை கொண்ட இந்த திட்டமானது வருகிற மே 29 உடன் முடிவடைகிறது. இதற்கிடையில் மைஜியோ பயன்பாட்டின் மை பிளான்ஸ் பகுதிகளின் கீழ், ஒரு புதிய மற்றும் இலவச ஆட்-ஆன் பேக் காணப்பட்டுள்ளது.

இலவச ஆட்-ஆன் பேக்.!

இலவச ஆட்-ஆன் பேக்.!

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே காட்சிப்படும் அந்த இலவச ஆட்-ஆன் பேக் ஆனது ரூ.101/- என்கிற மதிப்புடையது ஆகும். இது நிறுவனத்தின் ஐபில் பேக்கின் மீது கூடுதல் டேட்டா நன்மையை வழங்குமொரு இலவச பேக் ஆகும்.

நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா.!

நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா.!

ரூ.251-ஐ போன்றே டேட்டாவை தவிர வேறு எந்த நன்மைகளையும் வழங்காத இந்த ரூ.101/- ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. இந்த ஜியோ கிரிக்கெட் திட்டத்தின் செல்லுபடியும் மே 29 வரை மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

2ஜிபி-க்கு பின்னர் கிடைக்கும் வேகம் என்ன.?

2ஜிபி-க்கு பின்னர் கிடைக்கும் வேகம் என்ன.?

மொத்தத்தில், இந்த இலவச ஜியோ கிரிக்கெட் பேக் ஆனது நான்கு நாட்களுக்கு ( அதாவது மே 25 முதல் மே 29) மொத்தம் 8 ஜிபி தரவை வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் 2 ஜிபி என்கிற தினசரி வரம்பை மீறினால், 64Kbps என்கிற குறைவான வேகத்தின் கீழ் இணையத்தைத் தொடர்ந்து அணுகலாம்.

உங்களுக்கு அணுக கிடைக்கிறதா.?

உங்களுக்கு அணுக கிடைக்கிறதா.?

இது ஒரு டேட்டா ஆட்-ஆன் பேக் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம். அதாவது, எந்த குரல் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது என்று அர்த்தம். இந்த ஆட்-ஆன் பேக் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை. உங்களுக்கு இது அணுக கிடைக்கிறதா என்பதை அறிய உங்களின் மைஜியோ ஆப்பிற்குள் சென்று பரிசோதிக்கவும்.

ஏர்டெல் ரூ.49/- மற்றும் ரூ.193/- ஆட்-ஆன்.!

ஏர்டெல் ரூ.49/- மற்றும் ரூ.193/- ஆட்-ஆன்.!

சமீபத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் ஆட்-ஆன் திட்டங்களை சத்தமின்றி அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது ரூ.49/- மற்றும் ரூ.193/- என்கிற விலை நிர்ணயம் கொண்டுள்ள ஏர்டெல் ஆட்-ஆன் திட்டங்கள் முதலில் பஞ்சாப்பில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தில்லி மற்றும் நிறுவனத்தின் இதர பிரபலமான வட்டாரங்களில் அறிமுகமாகின.

டேட்டா ஆட்-ஆன் பேக்ஸ்.!

டேட்டா ஆட்-ஆன் பேக்ஸ்.!

அறிமுகமாகியுள்ள ரூ.193/- பேக் உடன் சேர்த்து ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு நுழைவு நிலை அளவிலான டேட்டா ஆட்-ஆன் பேக் ஆன ரூ.49/- திட்டமும் அறிமுகம் ஆகியுள்ளது. விலைகளில் மற்றும் டேட்டா நன்மைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் ஜியோவின் ஆட்-ஆன் திட்டங்களும், ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-அந்த திட்டங்களும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை தான் கொண்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

செல்லுபடியாகும் காலம்.?

செல்லுபடியாகும் காலம்.?

ரிலையன்ஸ் ஜியோ, ரூ.11/- முதல் ரூ.101/- வரையிலான ஆட்-ஆன் திட்டங்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, ரூ.101/- ஜியோ ஆட்-ஆன் பேக் ஆனது 6 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். கிடைக்கும் கூடுதல் டேட்டாவின் செல்லுபடியானது, ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ள பிரதான காம்போ திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை நீடிக்கும்.

ரூ.193/-ன் நன்மைகள்.!

ரூ.193/-ன் நன்மைகள்.!

உதாரணமாக, நீங்கள் ரூ.198/- ஜியோ ரீசார்ஜை நிகழ்த்தி இருந்தால், கூடுதலாக ரூ.101/- ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ரூ.198/-ன் செல்லுபடியாகும் காலம் வரை கூடுதல் டேட்டாவும் நீடிக்கும். ஜியோவின் அதே ஆட்-ஆன் பாணியை பின்பற்றும் ஏர்டெல், நம்பமுடியாத டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது அதன் ரூ.193/- ஆட்-ஆன் பேக் ஆனது வரம்பற்ற காம்போ திட்டத்தின் மேல் ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலா டேட்டா என்கிற நன்மையை வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 2.4 ஜிபி டேட்டா.!

ஒரு நாளைக்கு 2.4 ஜிபி டேட்டா.!

உதாரணமாக, ஏர்டெல் நிறுவனத்தின் ர்.509 ப்ரீபெயிட் வரம்பற்ற காம்போ திட்டத்தின் கீழ், நீங்கள் 90 நாட்களுக்கும், ஒரு நாளைக்கு 1.4 ஜிபி என்கிற டேட்டாவை பெறுவீர்கள். கூடுதலாக ரூ.193-ஐ ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் எந்த விதமான கூடுதல் கட்டணம் வசூலிக்கபடாமல், 90 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 2.4 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்.

அனைத்திற்கும் பொருந்தும்.!

அனைத்திற்கும் பொருந்தும்.!

இந்த அட்டகாசமான வாய்ப்பானது ஏர்டெல் நிறுவனத்தின் வரம்பிற்குட்பட்ட ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களுக்கான ரூ.199, ரூ.349, ரூ.399, ரூ.448, முதலியன அனைத்திற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தேதி வரை, பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து சிறந்த சலுகையாக இது திகழ்கிறது. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இப்படியொரு பிளான் இருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

ரூ.49/-ன் நன்மைகள்.!

ரூ.49/-ன் நன்மைகள்.!

நாள் ஒன்றிற்கு கூடுதலாக 1ஜிபி வழங்கும் ரூ.193/- உடன் வெளியான ரூ.49/- ஆனது, காம்போ திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் சேர்த்து 1 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். உதாரணமாக ரூ.509/- திட்டத்திற்கு மேல் இந்த ரூ.49/- ஐ ரீசார்ஜ் செய்தால், தினசரி கிடைக்கும் 1.4ஜிபி உடன் சேர்த்து செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் கூடுதலாக ஒரு ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த இரண்டு திட்டங்களின் விளைவாக, ஜியோவும் இதேபோன்ற ஆட்-ஆன் திட்டங்களை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio offer: Free 8GB 4G data to customers, here is how to avail. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X