Home
News

ரூ.200-க்கு கதை முடிந்தது.. Jio கஸ்டமர்களை ஆஃப் செய்த அம்பானி.. 2 திட்டத்துல வாய்ஸ்.. ஓடிடி சந்தா.. 5G டேட்டா!

ரூ.200-க்கும் கம்மியான விலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளையும், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 10 ஓடிடி ஆப்களின் (10 OTT Apps) சந்தாவையும் கொடுத்து அடிமட்ட விலையில் திட்டங்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களை ஆஃப் செய்துள்ளது முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம். இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன? எந்த விலைக்கு கிடைக்கின்றன? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஓடிடி சந்தா பிரியர்களுக்கு ரூ.200-க்கும் கம்மியான விலையில் இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ரூ.198 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்திலும், 10 ஓடிடி சந்தாவை ரூ.175 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்திலும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இது மற்ற நிறுவனங்களில் கிடைக்காத சலுகையாகும்.

ரூ.200-க்கு கதை முடிந்தது.. Jio கஸ்டமர்களை ஆஃப் செய்த முகேஷ் அம்பானி!

ஜியோ மலிவு விலை 5ஜி திட்டம் (Jio Cheapest 5G Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஏனென்றால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. இதுபோக 4ஜி டேட்டாவையும் கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 14 நாட்கள் முழுவதும் 5ஜி டேட்டாவும், நாளொன்றுக்கு 2 ஜிபிக்கான 4ஜி டேட்டாவும் கிடைக்கும்.

அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாமலேயே 28 ஜிபி டேட்டா கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கிடைக்கும். இந்த டேட்டா சலுகைகளே பட்டையை கிளப்புகின்றன. இருப்பினும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் உள்ளது.

100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். இந்த விலைக்கு 5ஜி திட்டமானது, ஜியோவில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இப்போது, ஓடிடி சந்தா கொடுக்கும் திட்டத்துக்கு வருவோம். இந்த திட்டத்தில் 10 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், 10 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்படும். ஆனால், மற்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. அது ஏன்?

ஜியோ மலிவு விலை ஓடிடி திட்டம் (Jio Cheapest OTT Plan): ரூ.200-க்கும் கீழ் 10 ஓடிடி ஆப்கள் கிடைப்பதால், இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த ஓடிடி திட்டத்தை ரீசார்ஜ் (OTT Plan Recharge) செய்யும் கஸ்டமர்களுக்கு 10 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும்.

இந்த டேட்டாவை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஓடிடி ஆப்களுக்கும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium) போன்ற முன்னணி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) கிடைக்கிறது.

அதேபோல சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் ஜியோடிவி (JioTV) ஆப்களின் சந்தாவும் பேக் செய்துள்ளது. ஆகவே, இந்த டேட்டா மற்றும் ஓடிடி சலுகை கொண்ட திட்டம் வெறும் ரூ.175-க்கும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டம் ரூ.198-க்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஜியோவில் இருக்கும் கஸ்டமர்கள் 4ஜிக்கு அடுத்து 5ஜி திட்டங்களுக்கு மாறிவருவதால், ஆரம்பத்திலேயே அடிமட்ட விலையில் 5ஜி திட்டங்களை கொடுக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதனாலேயே போட்டி நிறுவனமான ஏர்டெல் (Airtel) நிறுவனம் கொடுக்காத விலைக்கு இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை கொடுத்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offers Cheapest 5G Plan And 10 OTT Plan At Rs 198 And Rs 175 For Prepaid Recharge Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X