Home
News

புது ஆஃபர்.. FREE-ஆக 3 மாதம்.. ரூ.299 திட்டம் சும்மா வருது.. ஆக.31 கடைசி.. Jio-க்கு குஷி.. உடனே இதை பண்ணுங்க!

ஜியோ (Jio) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு ரூ.299 விலை கொண்ட திட்டம் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு இலவசமாக (3 Months Free) கிடைப்பதால் கஸ்டமர்கள் குஷியில் இருக்கின்றனர். இந்த திட்டத்தை மைஜியோ (MyJio) ஆப் மூலம் பெற்று கொள்ளலாம். இதில் கோட் ஜெனரேட் செய்து, அப்ளை செய்ய வேண்டும். இதுகுறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த சலுகை ஒட்டுமொத்த ஜியோ கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது. ரூ.299 மதிப்புள்ள ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தாவை இதில் பெற்று கொள்ளலாம். இதுகிட்டத்தட்ட ப்ரீ-ட்ரையல் போலத்தான் கொடுக்கப்படுகிறது. ஆகவே, உங்களது யுபிஐ அக்கவுண்ட்டை இணைக்க வேண்டும். அதில் இருந்து ரூ.2 கழிக்கப்படும். ஆனால், இந்த ரூ.2 மீண்டும் உங்களது அக்கவுண்ட்டில் கிரெடிட் செய்யப்பட்டுவிடும்.

புது ஆஃபர்.. FREE-ஆக 3 மாதம்.. ரூ.299 திட்டம் சும்மா.. ஆக.31 கடைசி!

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் வேண்டுமானால், இதை தொடரலாம். ஆனால், அப்போது மட்டுமே கட்டணம் இருக்கும். ஆகவே, 3 மாதங்களுக்கு இலவமாக பெற்று கொள்ளலாம். இதை மைஜியோ ஆப் அல்லது ஜியோசாவன் ஆப் ஆகியவற்றின் மூலம் பெற்று கொள்ள முடியும். உங்களிடம் மைஜியோஆப் இருந்தால், அதை ஓப்பன் செய்து ஆஃபர்கள் (Offers) பக்கத்துக்கு சென்று பெற்று கொள்ளலாம்.

அதை எப்படி செய்வது? உங்களது மைஜியோ ஆப்-ஐ ஓப்பன் செய்தவுடன் முகப்பு பக்கத்தில் மொபைல், ஹோம், என்டர்டெயின்மென்ட், ஃபைனான்ஸ் போன்ற பல்வேறு டேப்கள் இடம்பெற்றிருக்கும். கீழே மேலும் (More) டேப் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே சென்றால், ஆஃபர்கள் டேப் தோன்றும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, வலது புறத்தின் கீழே பாருங்கள்.

அங்கேயும் மற்றொரு ஆஃபர்கள் டேப் இருக்கும். இதை கிளிக் செய்தால் போதும், முதலிலேயே ஜியோசாவன் ப்ரோ சந்தா இலவச பக்கம் தோன்றும். அதை கிளிக் செய்தால், இந்த சலுகை குறித்த விவரங்கள் இருக்கும். அதேபோல ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மட்டுமே இதை பெற்று கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதை பார்த்துவிட்டு, கீழே இருக்கும் ஜெனரேட் கோட்-ஐ கிளிக் செய்யுங்கள்.

இதை செய்தால், உங்களுக்கு கோட் கிடைக்கும். இதை காப்பி செய்து கொள்ளுங்கள். இப்போது, ஜியோசாவன் ஆப் அல்லது ஜியோசாவன் வெப்சைட்டுக்கு செல்லுங்கள். அதில் ப்ரோ பேஜ் (Pro Page) பக்கத்துக்கு செல்லுங்கள். அதில் ப்ரோ தனிநபர் திட்டம் (Pro Individual Plan) இருக்கும். அதை கிளிக் செய்து கீழே சென்றால், அப்ளை கூப்பன் கோட் (Apply Coupon Code) டேப் இடம்பெற்றிருக்கும்.

இதில் முன்னதாக நீங்கள் காப்பி செய்த கோடை கொடுங்கள். அவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது முடிந்துவிட்டது. அந்த நாளில் இருந்து, 3 மாதங்களுக்கு உங்களுக்கு சந்தா கிடைக்கும். இது ப்ரோ சந்தாவாக இருப்பதால், அதனுடயை சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஏற்கனவே, உங்களிடம் சந்தா இருந்தால், அது முடிந்தவுடன் பெற்று கொள்ளலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசியாகும்.

ஜியோசாவன் ப்ரோ சந்தாவானது மாதத்துக்கு ரூ.89 செலவில் கிடைக்கிறது. இது தனி நபருக்கான திட்டமாக இருக்கிறது. ஆகவே, இதை மூன்று மாதங்களுக்கு இலவசமாக இப்போது பெற்று கொள்ள முடிகிறது. முன்னதாக ஜியோ நிறுவனத்தின் ரூ.249 மதிப்பிலான திட்டம் நீக்கம் செய்யப்பட்டது. இப்போது, 90 நாட்களுக்கு இலவச ஜியோசாவன் ப்ரோ சந்தா கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offer 3 Months JioSaavn Pro Subscription Worth Rs 299 For Free How To Generate Code And Redeem
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X