1,000 ரூபாயோ.. ரூ.10,000 ரூபாயோ.. இனிமே 2 சதவீத இலவச கோல்டு.. அம்பானியின் டிஜிட்டல் கோல்டு ஆஃபர்.. மே.5 கடைசி!
ரூ.1000 இருந்தால் போதும் டிஜிட்டல் கோல்டு வாங்குவது மட்டுமல்லாமல், அதற்கு இலவச கோல்டு வழங்கும் திட்டத்தை முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அட்சய திருதியை 2025 (Akshaya Tritiya 2025) முன்னிட்டு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரையில் டிஜிட்டல் கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு 2 சதவீதம் வரையில் இலவச கோல்டு வழங்குகிறது. இந்த டிஜிட்டல் கோல்டை எப்படி வாங்குவது?
அட்சய திருதியை வந்துவிட்டாலே கோல்டு வாங்கி வைப்பது பலரது வாடிக்கையாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் கோல்டு ஒரு இன்வெஸ்ட்மென்ட்டாக இருப்பதால், அதை எப்போது வாங்கினாலும் கஸ்டமர்களுக்கு லாபம்தான். ஆனால், அட்சய திருதியையின் போது கூடுதல் சலுகைகள் கிடைப்பதால், அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால், ஜியோ அதையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது.

ஜியோ ஃபைனான்ஸ் (JioFinance) மற்றும் மைஜியோ (MyJio) ஆப்களில் கிடைக்கும் டிஜிட்டல் கோல்டை வாங்கும் கஸ்டமர்களுக்கு 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையில் இலவச கோல்டு (2 Percent Free Gold) சலுகையை கொடுக்கிறது. இந்த சலுகையானது, அட்சய திருதியை முன்னிட்டு கொடுக்கப்படுவதால் குறிப்பிட்ட தேதிக்குள் வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்க இருக்கிறது.
ஆகவே, ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரையில் டிஜிட்டல் கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு இந்த இலவச கோல்டு வழங்கப்பட இருக்கிறது. இந்த ஜியோ டிஜிட்டல் கோல்டை ரூ.10 இருந்தாலோ வாங்க முடியும். ஆனால், இலவச கோல்டை பெறுவதற்கு குறைந்தபட்சம் ரூ.1,000 மதிப்பிலான டிஜிட்டல் கோல்டு வாங்க வேண்டும். ரூ.10,000 மற்றும் அதற்கு மேலும் சலுகை வருகிறது.
எவ்வளவு டிஜிட்டல் கோல்டு வாங்கினால் இலவச கோல்டு கிடைக்கும்? ரூ.1,000 மற்றும் ரூ.9,999 மதிப்பிலான டிஜிட்டல் கோல்டு வாங்கினால், அதனுடன் கூடுதலாக 1 சதவீத டிஜிட்டல் கோல்டு இலவசமாக கிடைக்கும். அதுவே ரூ.10,000-க்கும் மேல் டிஜிட்டல் கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு 2 சதவீத டிஜிட்டல் கோல்டு இலவசமாக கொடுக்கப்படும். இதற்காக கூப்பன் கோட்கள் கிடைக்கின்றன.
இதை ஜியோ ஃபைனான்ஸ் மற்றும் மைஜியோ ஆப்கள் மூலமே பெற்று கொள்ளலாம். அதேபோல அதே ஆப்களில் ரீடீம் (Redeem) செய்து கொள்ளலாம். ஒவ்வொரு கஸ்டமர்களுக்கும் 10 பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த இலவச கோல்டு கிடைக்கும். அதேபோல அதிகபட்சமாக ரூ.21,000 மதிப்புள்ள இலவச கோல்டை மட்டுமே பெற்று கொள்ள முடியும். அதற்கு மேல் கிடைக்காது.
இந்த இலவச கோல்டானது 72 மணி நேரத்திற்குள் உங்களது மொத்த டிஜிட்டல் கோல்டில் வரவு வைக்கப்படும். மேலும், இந்த இலவச கோல்டு சலுகையை எஸ்ஐபி (SIP) மூலம் டிஜிட்டல் கோல்டு வாங்கும் கஸ்டமர்கள் பெற முடியாது. லம்ப்-சம் முறையில் டிஜிட்டல் கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். இந்த டிஜிட்டல் கோல்டை எப்படி வாங்குவது?
ஜியோ ஃபைனான்ஸ் ஆப்-ஐ ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, முகப்பு பக்கம் (Home Page) தோன்றும். அப்படியே கிழே ஸ்க்ரோல் செய்யுங்கள். இப்போது, ப்ராடக்ட்ஸ் (Products), குயிக் ஆக்சன் (Quick Actions) ஆகிய ஆப்ஷன்கள் வரிசையாக தோன்றும். அதற்கு கீழே ஃபார் யூ (For You) பக்கம் தோன்றும். அதில் ஜியோ கோல்டு சலுகைக்கான பக்கம் இருக்கும். அதில் க்னோவ் மோர் (Know More) டேப்-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது, டிஜிட்டல் கோல்டு சேவையில் கொடுக்கப்படும் அனைத்து ஆப்ஷன்களும் இருக்கும். இதில் கோல்டு வாங்குவது, விற்பது, எஸ்ஐபி முறையில் வாங்குவது போன்ற ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கும். அதில் வழக்கம் போல நீங்கள் பை கோல்டு (Buy Gold) ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கோல்டு வாங்கி கொள்ளலாம். மேற்கண்ட விலையில் வாங்கும்பட்சத்தில் இலவச கோல்டு கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








