கேபிள் TV-ஐ விட கம்மி செலவில்.. மாதாந்திரம் ரூ.112 க்கு Jio-வின் 11 மாத திட்டம்.. டெய்லி டேட்டா, வாய்ஸ், SMS!
இது முகேஷ் அம்பானியால் மட்டுமே முடியும். வெறும் ரூ.699 க்கு 4ஜி போனையும் கொடுத்து.. அதற்கு மாதந்தோறும் வெறும் ரூ.112 செலவில் 11 மாதங்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தையும் கொடுக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தால் மட்டுமே முடியும்.
நாம் இங்கே பேசுவது ஜியோபாரத் போன்களுக்கான மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை (JioBharat Prepaid Recharge Plans) பற்றித்தான். ஜியோபாரத் போன்கள் அனைத்துமே ஜியோ-சிம் லாக் (Jio-SIM Lock) செய்யப்பட்ட காரணத்தால் (அதாவது ஜியோ சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற காரணத்தால்), ஜியோபாரத் போன்களுக்கான ரீசார்ஜ் திட்டங்கள் மிகவும் மலிவானவைகளாக உள்ளன.

விலை குறைவானதாக மட்டுமின்றி எண்ணிக்கையிலும் கூட அவைகள் குறைவாகவே உள்ளன. பல பேர் பயன்படுத்தும் ஜியோபாரத் 4ஜி போன்களுக்கு மொத்தம் 3 வகையான ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது: அவைகள் 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 11 மாதங்கள் என்கிற வெவ்வேறு வகையான வேலிடிட்டி உடன் வருகின்றன.
இதில் 11 மாத கால வேலிடிட்டி உடன் வரும் ஜியோபாரத் திட்டம் தான் ஹைலைட். ஏனென்றால் இது மாதாந்திரம் வெறும் ரூ.112 செலவின் கீழ் டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன. இந்த ஜியோபாரத் திட்டத்தின் விலை ரூ.1234 (JioBharat Rs 1234 Prepaid Plan Details) ஆகும்.
இதுதான் ஜியோபாரத் ப்ரீபெய்ட் பேக்குகளிலேயே மிகவும் விலையுயர்ந்த ஜியோபாரத் ஃபோன் திட்டமாகும். இது 336 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 0.5ஜிபி டேட்டா கிடைக்கும்; அதாவது செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
ஜியோபாரத் போன்களுக்கான மற்ற 2 ப்ரீபெய்ட் பேக்குகளை பொறுத்தவரை.. 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியை விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.123 மதிப்புள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம், அதுவே 56 நாட்கள் என்கிற வேலிடிட்டியை விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.234 மதிப்புள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
ரூ.123 திட்டம் (JioBharat Rs 123 Prepaid Plan Details) தான் இருப்பதிலேயே மிகவும் மலிவான ஜியோபாரத் போன் திட்டமாகும். இது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 0.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதலாக தேர்ந்தெடுக்க்கப்பட்ட ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்களும் கிடைக்கும்.
இந்த பட்டியலில் நாம் கடைசியாக பார்க்க உள்ள திட்டம் - ரூ.234 (JioBharat Rs 234 Prepaid Plan Details) திட்டமாகும். இது 56 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 0.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதுவும் தேர்ந்தெடுக்க்கப்பட்ட ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) என்கிற புதிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தை அறிமுகம் செய்திருந்தாலும் கூட, மேற்கண்ட 3 திட்டங்களிலுமே ஜியோசினிமா ஆப் (Jio Cinema App) சந்தா தான் கிடைக்கும் என்று ஜியோ வலைத்தளம் கூறுகிறது. ஐயோ சினிமாவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) உடன் இணைத்து உருவானதே ஜியோ ஹாட்ஸ்டார் தளமாகும். ஆனாலும் ஜியோ சினிமா ஆப் பிரத்யேகமாக டவுன்லோட் / இன்ஸ்டால் செய்ய கிடைப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications