செதற விட்ட அம்பானி.. 3 மாசம் ரீசார்ஜ் இல்ல.. கேபிள் டிவி இல்ல.. ரூ.1119-க்கு இறக்கியாச்சு.. Jio யூசர்கள் குஷி!
ஜியோ (Jio) நிறுவனம், ஏற்கனவே ஒரு வருடத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொண்ட ரூ.3599 திட்டத்தை இலவசமாக வழங்க தொடங்கிவிட்டது. இந்த இலவச திட்டத்தை பெற ஏர்ஃபைபர் (Airfiber) திட்டத்தை கஸ்டமர்கள் புக்கிங் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால், எந்த திட்டத்தை புக்கிங் செய்ய வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போது நாம் பார்க்கப்போகும் ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தில் அந்த குழப்பத்துக்கு இடமில்லை. இந்த திட்டத்தின் சலுகைகளை முதலில் பார்த்து விடுவோம்.
ஜியோ ரூ 1199 திட்ட சலுகைகள் (Jio Rs 1199 Plan Offer): இந்த திட்டத்தைவிட மலிவான விலையில் ஏர்ஃபைபர் திட்டங்கள் இருக்கின்றன. அதாவது, ரூ.599 மற்றும் ரூ.899 விலையில் கிடைக்கின்றன. ஆனால், அந்த திட்டங்களை பெற வேண்டுமானால், நீங்கள் குறைந்தது 6 மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். கூடுதலாக ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.

ஆனால், இந்த ரூ.1199 திட்டத்தில் மூன்று மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்தினால் போதும், அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவை (OTT Apps Subscription) பெற முடியும். இதில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும்.
ஒரு மாதத்துக்கு 1000 ஜிபி டேட்டா வரையில் பயன்படுத்த முடியும். ஆகவே, ஒரு நாளுக்கு 33 ஜிபிக்கும் அதிமான டேட்டாவை பயன்படுத்தலாம். இதுவொரு வை-பை ரூட்டர் டேட்டா சலுகை என்பதால், மொபைல், டிவி மற்றும் லேப்டாப் போன்ற பல்வேறு டிவைஸ்களில் கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான ரூட்டர் வழங்கப்படுகிறது.
இந்த 1000 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை வழங்கப்படும். அதேபோல லேண்ட்லைன் டிவைஸ் இருந்தால், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை (STD Voice Calls) இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் 800+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கிறது.

மேலும், 12-க்கும் மேலான ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, கேபிள் டிவிக்கு மாற்றாக இந்த ஏர்ஃபைபர் திட்டம் தட்டித் தூக்குகிறது. ஓடிடி ஆப்களை பார்க்கையில், நெட்ஃபிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய ஆப்கள் வருகின்றன.
இதுபோக சோனிலிவ் (Sony Liv), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஷீமாரூமீ (ShemarooMe), ஏஎல்டிபாலாஜி (ALTBalaji), ஈராஸ்நவ் (Eros Now), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), ஈடிவி வின் (ETV Win) மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கான ஃபேன்கோட் (FanCode) கிடைக்கிறது.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மூன்று மாதங்களுக்கு கேபிள் டிவி தேவைப்படாது. அதேபோல மொபைல் டேட்டாவுக்கு ரீசார்ஜ் தேவைப்படாது. கூடவே, புதிய ஆஃபரின் கீழ் ரூ.3599 மதிப்பிலான திட்டமும் இலவமாக பெற்று கொள்ளலாம். இப்பது ஏராளமான சலுகைகளை இந்த திட்டத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








