நியூ இயர் ஆபர்! ஜன.11 கடைசி.. ரூ.2150 இலவச கூப்பன்.. 200 நாட்களுக்கு ரீசார்ஜ்.. Jio-க்கு வாரி கொடுத்த அம்பானி!
Jio New Year Offer Rs 2025 Plan: 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் முன்பே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், புத்தாண்டு ஆபரை ஆரம்பித்துவிட்டது. ஒட்டுமொத்த ஜியோ கஸ்டமர்களுக்கும் 200 நாட்கள் வேலிடிட்டி, 500 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், ரூ.2150 மதிப்பிலான கூப்பன்களையும் கொடுக்கிறது. ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ஜியோ புது வருட ஆபர் (Jio New Year Offer) கிடைக்க இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த புது வருட ஆபரை பெறுவதற்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதிக்குள் புதிதாக அறிமுகம் செய்துள்ள 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் அதன் விலையைவிட அதிகமாக கிடைக்கின்றன. இது கிட்டத்தட்ட இலவசம் போலத்தான் இருக்கிறது.

ஜியோ புது வருட ஆபர் ரூ 2025 திட்டம்: இந்த புது ஜியோ திட்டமானது (New Jio Plan) 200 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது. ஆகவே, 6 மாதங்களுக்கும் மேல் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த புது திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. அதே நேரத்தில் 4ஜி டேட்டா சலுகையும் இருக்கிறது.
ஆகவே, 500 ஜிபி டேட்டாவை (500GB Data) பயன்படுத்தலாம். இது 2.5 ஜிபி டேட்டா வீதம் தினசரி லிமிட்டில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா கிடைக்கும். இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா வருவதால், இந்த போஸ்ட் டேட்டாவின் தேவை இருக்காது. தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்துள்ளது.
இந்த புது வருட திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) கால்கள் இருக்கிறது. மேலும், எஸ்டிடி (STD) கால்களையும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் (Roaming Voice Calls) நீங்கள் செய்யலாம். இந்த சலுகைகள் போக ரூ.2150 மதிப்பிலான கூப்பன்கள் ( Rs 2150 Worth Coupons) வழங்கப்படுகின்றன. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு அஜியோ (Ajio) தளத்தில் ரூ.2999-க்கு மேல் ஆர்டர் செய்தால் ரூ.500 டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
இதுபோக ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) தளத்தில் விமான டிக்கெட் புக்கிங் செய்யும் ஜியோ கஸ்டமர்களுக்கு ரூ.1500 ஆஃபர் கொடுக்கப்படும். மேலும், ஆன்லைன் ஃபுட் டெலிவரி சேவையை வழங்கும் ஸ்விக்கி (Swiggy) ஆப் மூலம் ரூ.499-க்கு மேல் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்க ரூ.150 ஆஃபர் கொடுக்கப்படும். இப்படி மொத்தமாக ரூ.2150 மதிப்பிலான ஆஃபர் கிடைக்கிறது.
ஆனால், இந்த புது வருட திட்டத்தின் விலை ரூ.2025ஆக மட்டுமே இருக்கிறது. ஆகவே, இது இலசமாக கிடைக்கும் திட்டத்தை போலவே தோன்றுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், ஜியோ கொடுத்திருக்கும் அவகாசத்துக்குள் பெற்று கொள்ளுங்கள். அதாவது, டிசம்பர் 11ஆம் தேதி முதல் புத்தாண்டு திட்டம் (New Year Plan) கிடைக்க தொடங்கிவிட்டது.
ஜனவரி 11ஆம் தேதி வரையில் இந்த திட்டம் கிடைக்கும். அதற்கு பிறகு கிடைக்காது. ஆகவே, லிமிடெட் ஃபிரீயர் சலுகையை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த புது ஜியோ திட்டத்துக்கும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகைகள் பொருந்தும். ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆப்களில் பிரீமியம் அல்லாத வீடியோக்களை கஸ்டமர்கள் பார்த்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications