2025-க்கு ராஜயோகம்.. 200 நாட்களுக்கு அம்பானி ஆபர்.. தேதி குறிச்சாச்சு.. இதை விட்ராதீங்க.. ரீசார்ஜ் பண்ணிடுங்க!
புது வருடத்தை விடுங்க, பொங்கல் வந்தாச்சுல அப்போ ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு முகேஷ் அம்பானியின் ஆஃபர் இருக்குமா இருக்காதா என்று கேட்டால், இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். புத்தாண்ட்டை முன்னிட்டு வழங்கப்பட்ட 200 நாட்கள் ஜியோ திட்டத்தின் ரீசார்ஜ் தேதி ஜனவரி 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் என்னென்ன சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை இப்போது பாருங்கள்.
2025ஆம் ஆண்டின் முதல் ஜியோ ஆஃபராக ரூ.2025 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் இருந்தது. இந்த திட்டத்துக்கு ரூ.2025 விலை நிர்ணயிக்கப்பட்டாலும், ரூ.2150 மதிப்பிலான இலவச ஆஃபர்களை கொடுத்து கஸ்டமர்களை தட்டித் தூக்கியது. ஆனால், இந்த திட்டத்தை ஜனவரி 11ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்று கெடு இருந்தது.

இப்போது, பொங்கல் பண்டிக்கைக்கும் கிடைக்கும்படி ஜனவரி 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜியோ கஸ்டமர்கள் குஷியாகிவிட்டனர். 2025ஆம் ஆண்டில் முதல் இலவச ஆஃபர்களை கொடுத்த இந்த ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Rs 2025 Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், 5ஜி டேட்டா போன்ற சலுகைகள் மட்டும் கொடுக்கப்படவில்லை. அஜியோ, ஈஸ்மைட்ரிப், ஸ்விக்கி போன்றவற்றில் இலவச ஆஃபர்களையும் கொடுக்கிறது. வாய்ஸ் கால்களை பொறுத்தவரையில், 200 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் கால்களை (Unlimited Calls) கொடுக்கிறது.
அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. இருப்பினும், தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவை கொடுத்து இருக்கிறது. இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வழங்கப்படுகிறது. எஸ்எம்எஸ் சலுகை மட்டும் வழக்கமாக கிடைக்கும் நாளொன்றுக்கு 100 என்ற கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, 200 நாட்களுக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு எந்தவொரு குறையும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் இருக்காது. இப்போது, ரூ.2150 மதிப்பில் இலவசமாக கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்வோம். அஜியோ (Ajio), ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) மற்றும் ஸ்விக்கி (Swiggy) ஆப்களில் இந்த சலுகைகள் வருகிறது.
ஆகவே, அஜியோ ஆப் மூலம் ரூ.2999-க்கு மேல் ஷாப்பிங் செய்தால் உங்களுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். அதேபோல ஈஸ்மைட்ரிப் ஆப் மூலம் விமான டிக்கெட் புக்கிங் செய்யதால், உங்களுக்கு ரூ.1500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். மேலும், ஸ்விக்கி ஆப் மூலம் ரூ.499-க்கு மேல் ஆர்டர் செய்தால், ரூ.150 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும்.
இப்படியான சலுகைகள் இந்த ஜியோ ரூ.2025 திட்டத்தில் இருக்கிறது. இதேபோல ஜியோ ஏர்ஃபைபர் (Jio Airfiber) மற்றும் ஜியோ ஃபைபர் (Jio Fiber) கஸ்டமர்களுக்கும் இலவச சலுகைகள் இருக்கின்றன. 2 ஆண்டுகளுக்கான இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவை அந்த கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. ஆனால், சில திட்டங்களில் மட்டுமே கிடைக்கும்.
இதுவொரு ஒன்-டைம் சலுகையாகும். ஆகவே, அடுத்து வரும் திட்டங்களை ஒரு முறை ரீசார்ஜ் செய்யும்போது மட்டுமே கிடைக்கும். ஆகவே, ரூ.888 திட்டம், ரூ.1199 திட்டம், ரூ.1499 திட்டம், ரூ.2499 திட்டம் மற்றும் ரூ.3499 திட்டம் ஆகியவற்றில் இந்த இலவச யூடியூப் பிரீமியம் சந்தா கொடுக்கப்படுகிறது. இப்படி 2025ஆம் ஆண்டில் 2 இலவச சலுகைகள் கிடைக்கிறது.
ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தபட்டதில் இருந்து அதிருப்தி அடைந்த கஸ்டமர்களை தட்டித் தூக்க பல்வேறு இலவச சலுகைகளை ஜியோ நிறுவனம் கொடுத்து வருகிறது. ஆனால், அவை லிமிடெட் ப்ரீயட் ஆஃபராவே இருக்கின்றன. இருப்பினும், தேதி நீட்டிக்கபட்டு இருப்பது கஸ்டமர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications








