Home
News

Jio நியூ இயர் ஆஃபர் 2024: ஒரே ஒரு ரீசார்ஜ்.. 389 நாட்களுக்கு ஒஹோன்னு நன்மைகள்.. 912GB டேட்டா.. அன்லிமிடெட் 5G!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் நியூ இயர் ஆஃபர் 2024 (New Year Offer 2024) என்கிற சிறப்பு புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. ஜியோவின் இந்த புதிய சலுகை ஒரே ஒரு திட்டத்தின் மீது மட்டுமே கிடைக்கிறது.

அது என்ன திட்டம்? ஜியோவின் 2024 நியூ இயர் ஆஃபரின் கீழ் அது என்ன மாதிரியான கூடுதல் நன்மையை (Extra Benefits) வழங்கும்? இந்த திட்டத்தின் வழக்கமான நன்மைகள் (Usual Benefits) என்ன? இந்த திட்டத்தின் வேலிடிட்டி என்ன? இதோ விவரங்கள்:

Jio நியூ இயர் ஆஃபர் 2024.. 389 நாட்களுக்கு ஒஹோன்னு நன்மைகள்!

அது என்ன திட்டம்? ஜியோவின் 2024 நியூ இயர் ஆஃபரை பெற்றுள்ள ஒரே ஒரு திட்டம் - ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தான். புத்தாண்டு சலுகையாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரூ.2999 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் வழக்கமான 365 நாட்கள் வேலிடிட்டி இல்லாமல் கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது மொத்தம் 389 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஜியோ வலைத்தளத்தின் படி, இந்த எக்ஸ்ட்ரா வேலிடிட்டியானது வவுச்சர் வடிவில் கிடைக்கும்; இந்த புத்தாண்டு சலுகை டிசம்பர் 20, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.

Jio நியூ இயர் ஆஃபர் 2024.. 389 நாட்களுக்கு ஒஹோன்னு நன்மைகள்!

ரூ.2999 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது தினமும் 2.5 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்கும். குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் 64 கேபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். அதாவது உங்களுக்கு "அன்லிமிடெட் 4ஜி டேட்டா" கிடைக்கும்.

கூடவே ரூ.2999 ப்ரீபெயிட் ரீசார்ஜின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கும். ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை பெற உங்களிடம் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்பதும், நீங்கள் வசிக்கும் பகுதியில் ஜியோ 5ஜி சேவை அறிமுகமாகி இருக்க வேண்டும் என்பதும் அவசியம்.

Jio நியூ இயர் ஆஃபர் 2024.. 389 நாட்களுக்கு ஒஹோன்னு நன்மைகள்!

வாய்ஸ் கால் நன்மைகளை பொறுத்தவரை, ஹோம் மற்றும் ரோமிங்கில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். எஸ்எம்எஸ் நன்மையை பொறுத்தவரை, ரூ.2999 திட்டத்தின் கீழ் தினமும் 100 நேஷனல் எஸ்எம்எஸ்கள் இலவசமாக கிடைக்கும். கடைசியாக ஜியோ ஆப்ஸ் தொகுப்பிற்கான இலவச சந்தாவும் கிடைக்கும்.

ஜியோவின் ஓராண்டு திட்டங்களுக்கு போட்டியாக வோடபோன் ஐடியா ரூ.3,199 க்கு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Vodafone Idea Rs.3199 Prepaid Recharge) அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. விஐ-யின் புதிய ரூ.3,199 திட்டமானது, அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கான (Amazon Prime Video Mobile Edition) ஓராண்டு சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

அதாவது இது ஓடிடி (OTT) பிரியர்களை கவர்ந்து இழுக்கும் ஒரு பிரத்யேக திட்டமாகும். மற்ற நன்மைகளை பொறுத்தவரை, வோடாபோன் ஐடியாவின் ரூ.3,199 ரீசார்ஜ் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (2GB Daily Data) போன்றவைகளை வழங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

வோடாபோன் ஐடியா தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை சமீபத்திய டிராய் (TRAI) அறிக்கையின்படி, வோடாபோன் ஐடியா நிறுவனமானது கடந்த 17 மாதங்களில் முதல் முறையாக ஆக்டிவ் யூசர்களை சேர்த்துள்ளது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் 2023-இல் 0.4 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் யூசர்களை (Active Wireless Users) சேர்த்துள்ளது.

இந்த எண்ணிக்கை மிகவும் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட, கடந்த 1.5 ஆண்டுகளாக வோடாபோன் ஐடியா சந்தித்த இழப்புகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, உண்மையிலேயே இதுவொரு கவனிக்கத்தக்க வளர்ச்சி என்பதில் சந்தேகமே வேண்டாம். வோடபோன் ஐடியா இன்னமும் தனது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யவே இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio New Year Offer 2024 Recharge Rs 2999 Prepaid Plan Get 24 Days Extra Validity For Free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X