இன்னொரு புதிய 2025 ஆபர்.. கூடவே 2 திட்டங்களின் மீது விலை குறைப்பு.. Jio கஸ்டமர்களை கையில் பிடிக்க முடியல!
இரவோடு இரவாக மொத்த கதையும் மாறியது போல, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரே நேரத்தில் 3 முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. முதல் இரண்டு மாற்றங்கள் - இந்நிறுவனத்தின் புதிய வாய்ஸ் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை பற்றியது. கடைசியாக இருப்பது - இந்நிறுவனத்தின் புதிய குடியரசு தின ஆபர் பற்றியது!
சில தினங்களுக்கு முன்பாக, இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஆனது எஸ்டிவி வாய்ஸ் மற்றும் மெசேஜ்களுக்கென ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் (Special Tariff Vouchers - STV) திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற டிராய்-ன் சமீபத்திய உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக ஜியோ நிறுவனம் 2 புதிய வாய்ஸ் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்திருந்தது. தற்போது அந்த 2 திட்டங்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது.

01. ஜியோவின் புதிய ரூ.448 வாய்ஸ்-ஒன்லி பிளான்: ஜியோவின் நுழைவு-நிலை வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டம் இப்போது ரூ.448 முதல் தொடங்குகிறது. முன்னதாக இந்த திட்டத்தின் விலை ரூ.458 ஆக இருந்தது. தற்போது ரூ.10 விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஜியோவின் ரூ.448 வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும். ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை அதன் 'வேல்யூ' பிரிவின் கீழ் வகைப்படுத்துகிறது. இந்த திட்டம் இப்போது ஒரு நாளைக்கு சுமார் ரூ.5 அல்லது மாதத்திற்கு ரூ.149 செலவில் அணுக கிடைக்கிறது.
02. ஜியோவின் புதிய ரூ.1748 வாய்ஸ்-ஒன்லி பிளான்: ஜியோவின் இரண்டாவது மற்றும் கடைசி வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டம் இப்போது ரூ.1748 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டத்தின் விலை ரூ.1958 ஆக இருந்தது. தற்போது ரூ.210 விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் முன்னதாக இருந்த 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியை 336 நாட்களாக குறைத்துள்ளது.
இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும். ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தையும் அதன் 'வேல்யூ' பிரிவின் கீழ் வகைப்படுத்துகிறது. இந்த திட்டம் இப்போது ஒரு நாளைக்கு சுமார் ரூ.5.20 அல்லது மாதத்திற்கு ரூ.158 செலவில் அணுக கிடைக்கிறது.
03. ஜியோவின் 2025 குடியரசு தினச் சலுகை: கடந்த ஆண்டுகளை போலவே இந்தாண்டும் ஜியோ நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்கான குடியரசு தின சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ இணையதளத்தில் உள்ள ஒரு புதிய பேனரின்படி, ரூ.3599 வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.3650 மதிப்புள்ள இலவச சலுகைகள் கிடைக்கும். அதாவது ரீசார்ஜ் செய்த பணத்தை 100% பரிசு கூப்பன்களாக திரும்பி கிடைக்கும் என்று அர்த்தம்.
என்னென்ன கூப்பன்கள் கிடைக்கும்? ஏஜியோவில் ரூ.2999 ரூபாய்க்கு மேல் பர்சேஸ் செய்யும் போது ரூ.500 பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். டிராவில் (Tira) ஷாப்பிங் செய்வதில் 25 சதவீதம் வரை தள்ளுபடியை பெற முடியும். இதற்கான குறைந்தபட்ச ஆர்டர் வேல்யூ ரூ.999 ஆகும்.
கூடுதலாக, ரூ.499 மதிப்புள்ள உணவை ஸ்விக்கி (Swiggy) மூலம் ஆர்டர் செய்தால், அவர்களுக்கு ரூ.150 தள்ளுபடி கிடைக்கும். கடைசியாக ஈஸ் மைட் ரிப் வலைத்தளம் (EaseMyTrip.com) வழியாக செய்யப்படும் விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக மொத்தம் ரூ.3650 மதிப்புள்ள கூப்பன்கள் / தள்ளுபடி கிடைக்கும்.
ஜியோவின் ரூ.3599 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 912.5ஜிபி டேட்டா (டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இண்டர்நெட் ஸ்பீட் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்), ஜியோ ஆப்ஸ் நன்மைகள் மற்றும் தகுதியுள்ள சந்தாதாரர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்!


Click it and Unblock the Notifications








