Home
News

90 நாட்கள் இலவசம்.. Jio-வின் புதிய அன்லிமிடெட் ஆபர் அறிவிப்பு.. ஜியோ சிம் மற்றும் ரூ.300 இருந்தா போதும்!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, ரூ.299 மற்றும் அதற்கு மேலான விலையில் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜியோ அன்லிமிடெட் என்கிற புதிய ஆபரை (Reliance Jio Unlimited Offer) அறிவித்துள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவும், கிரிக்கெட் பிரியர்கள் ஐபிஎல் 2025 போட்டிகளை இலவசமாக (IPL 2025 Cricket Matches Free Live) பார்க்கவும்.. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் (மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு) இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (Free JioHotstar subscription) வழங்குவதாக அறிவித்து உள்ளது.

90 நாட்கள் இலவசம்.. Jio-வின் புதிய அன்லிமிடெட் ஆபர் அறிவிப்பு!

இந்த புதிய சலுகையின் கீழ் ஜியோ பயனர்கள், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ள கன்டென்ட்களை 90 நாட்களுக்கு இலவசமாக பார்க்க முடியும், மேலும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகளை 4கே தரத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். ஜியோ பயனர்கள் இந்த சலுகையை (இன்று முதல்) மார்ச் 17, 2025 முதல் பெற முடியும். மேலும் இந்த சலுகை மார்ச் 31, 2025 வரை நீடிக்கும்

ஏற்கனவே ஆக்டிவ் பிளானை கொண்டுள்ள ப்ரீபெய்ட் பயனர்கள் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவிற்கான ரூ.100 ஆட்-ஆன் பேக்கை ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி-க்கான அணுகலை பெறலாம் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஜியோவின் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் சமீபத்தில் தான் அறிமுகமானது

ரூ.100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜியோ ரீசார்ஜ் ஆனது ஒரு டேட்டா-ஒன்லி பிளான் ஆகும். இது மொத்தம் 5ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும். ஆனால் 3 மாதங்களுக்கான அல்லது 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. இது ரூ.149 க்கு கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை போல் மொபைல்-ஒன்லி சந்தா கிடையாது. அதாவது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி கன்டென்ட்களை மொபைல் வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்கிற கட்டுப்பாடு ரூ.100 திட்டத்தில் இல்லை.

மாறாக இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் ஆகிய இரண்டிலும் 1080பி வரையிலான ரெசல்யூஷனின் கீழ் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும். இதேபோன்ற நன்மைகளை தான் - ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர் திட்டமும் வழங்குகிறது. ஆனால் அந்த சந்தாவின் விலை ரூ.299 ஆகும். ஆக எப்படி பார்த்தாலும் ரூ.100 டேட்டா பிளானின் கீழ் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது முற்றிலும் லாபகரமான தேர்வாக இருக்கும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க - ஜியோவின் மற்ற டேட்டா ஒன்லி பிளான்களை போலவே ரூ.100 திட்டத்தின் கீழும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்காது மற்றும் இதற்கென பிரத்தியேகமான சர்வீஸ் வேலிடிட்டி எதுவும் இருக்காது. மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு மெயின் ரீசார்ஜ் தேவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஜியோ ஹாட்ஸ்டார் சேவையை பிரத்யேக திட்டங்கள் உடனும் நீங்கள் அணுகலாம். இதன்கீழ் மொத்தம் 3 வகையான சந்தா திட்டங்கள் உள்ளன: மொபைல் பிளான், சூப்பர் பிளான் மற்றும் ப்ரீமியம் பிளான். பேஸிக் மொபைல் பிளான் ஆனது 2 வகையான சந்தா விருப்பங்களுடன் வருகிறது.

ஒன்று - 3 மாத கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான். விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டம், ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டும், எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.149 ஆகும். அதாவது மாதத்திற்கு ரூ.50 என்கிற செலவின் கீழ் இது கிடைக்கும்.

இரண்டாவது - 1 ஆண்டு கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான்: இதுவும் ரூ.149-ஐ போலவே விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டமாகும். மேலும் ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டுமே எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் இது 1 ஆண்டு அல்லது 12 மாதங்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. 1 ஆண்டு வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆகும்

ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டங்கள்: இதுவும் விளம்பர ஆதரவுடன் வரும் திட்டம் தான். ஆனால் இது ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் ஃபுல்எச்டி (1080பி) ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கிறது மற்றும் இது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் வருகிறது. விலை மூன்று மாதங்களுக்கு - ரூ.299 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.899.

ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டங்கள்: இது விளம்பரங்கள் இல்லாத திட்டமாகும். இது ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் 4கே ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் விளையாட்டு மற்றும் பிற லைவ் நிகழ்வுகலில் சில விளம்பரங்கள் இருக்கும் என்று ஜியோஸ்டார் நிறுவனம் கூறுகிறது. விலை 1 மாதத்திற்கு ரூ.299, 3 மாதங்களுக்கு - ரூ.499 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.1499.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio New Unlimited Offer 90 Days Free JioHotstar Subscription With Prepaid Plans Rs 299 and Above
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X