Home
News

ரெடியா இருங்க? உங்க வீட்டுக்கும் ஆபிஸுக்கும் வரப்போகும் புதிய Jio சேவை AirFiber.. அம்பானியின் அடுத்த ஸ்கெட்ச்!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, உங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிவேக வயர்லெஸ் இண்டர்நெட்டை (Highspeed Wireless Internet) வழங்கும் நோக்கத்தின் கீழ் ஒரு புதிய சேவையை (New Service) அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

அதென்ன சேவை? அது ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) என்று அழைக்கப்பட உள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் என்றால் 5ஜி தொழில்நுட்பத்தை (5G Technology) பயன்படுத்தி காற்றில் ஃபைபர் போன்ற வேகத்தை (Fiber-like Speed Over The Air) வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய சேவையாகும்.

Jio AirFiber: உங்க வீட்டுக்கும், ஆபிஸுக்கும் வரப்போகும் புதிய சேவை!

ஜியோ நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு ஆன்டெனாவுடன் (Antenna) வெள்ளை நிற ரூட்டர் (White Router) போன்று இருக்கும் ஒரு சாதனத்தை இணைத்து 'ஆன்' (ON) செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் 1ஜிபிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை அனுபவிக்க முடியும்.

ஜியோ ஏர்ஃபைபரில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த சேவையின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இதன் கீழ் உங்களுக்கு 1 ஜிபிபிஎஸ் (1Gbps) என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கிடைக்கும். இது தவிர்த்து ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் பேரண்டல் கண்ட்ரோல் (Parental control) மற்றும் வைஃபை 6 (Wi-Fi 6) ஆதரவும் கிடைக்கும்

மேலும் டிவி (TV) உடனான தடையற்ற ஒருங்கிணைப்பிற்கு ஜியோ செட் டாப் பாக்ஸ் (Jio Set top Box), மிகவும் எளிமையான இன்ஸ்டாலேஷன், ஆப் வழியிலான கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட சில இணையதளங்கள் அல்லது டிவைஸ்களை தடுக்கும் திறன் போன்ற அம்சங்களும் ஜியோ ஏர்ஃபைபரின் கீழ் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஏர்ஃபைபரின் கவரேஜ் எப்படி இருக்கும்? வேகமான, நம்பகமான மற்றும் விரிவான வைஃபை கவரேஜை வழங்க ஜியோ ஏர்ஃபைபர் ஆனது ஜியோ நிறுவனத்தின் ட்ரூ 5ஜி-ஐ (True 5G) பயன்படுத்துகிறது. மேலும் இது ஒரு வீடு அல்லது 1000 சதுரடி கொண்ட அலுவலகத்தில் கூட நல்ல கவரேஜை வழங்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பிஎஸ்என்எல், ஏர்டெல்-க்கு வேட்டு வைக்குமா? ஜியோவின் இந்த புதிய வைஃபை சேவையானது ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஆக்ட் (ACT) போன்ற பிற பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். போதாக்குறைக்கு இது ஜியோ ட்ரூ 5ஜியின் ஸ்டேண்ட் அலோன் (Standalone - SA) தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, இது ஏற்கனவே உள்ள 4ஜி உள்கட்டமைப்பை இது நம்பி இருக்காது. இதன் மூலம் நான்-ஸ்டேண்ட் அலோன் (Non-standalone) தொழில்நுட்பத்தை கொண்டுள்ள மற்ற நிறுவனங்களை விட ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது வேகம் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் ஒரு படி மேலே இருக்கும்!

ஜியோ ஏர்ஃபைபர் எப்போது அறிமுகமாகும்? ஜியோவின் இந்த புதிய சேவை சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற தகவல்கள் இல்லை. இருப்பினும் தி எகனாமிக் டைம்ஸின் சமீபத்திய அறிக்கையானது, இந்த சேவை அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு வரக்கூடும் என்று கூறுகிறது.

நினைவூட்டும் வண்ணம், இந்த சேவை கடந்த ஆண்டு நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் (Annual General Meeting - AGM) அறிவிக்கப்பட்டது. மேலும் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக அறிமுகமாகி வருகிறது. ஆக எப்படி பார்த்தாலும் ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது கூடிய விரைவில் அறிமுகமாகி விடும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio New Service Called Jio AirFiber To Give Up to 1Gbps Internet Speed at home and office
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X