Home
News

டெலிகாம் மார்க்கெட்டை முடிச்சுவிட்ட அம்பானி.. ரூ.77 க்கு புது Jio ரீசார்ஜ்.. நம்ப முடியாத வேலிடிட்டி, OTT!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் பயனர்களுக்காக ரூ.77 மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Rs.77 Prepaid Plan) அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு கிடைக்கும் ஒரு புதிய டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும்

சுவாரஸ்யமாக இதில் ஓடிடி (OTT) நன்மையும் தொகுக்கப்பட்டுள்ளது. உண்மையில் ரூ.77 திட்டமானது டேட்டாவை விட ஓடிடி நன்மையை வழங்குவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. ஏனெனில் இது பயனர்களுக்கு மிக குறைந்த அளவிலான டேட்டாவை மட்டுமே வவழங்குகிறது ஆனால் நல்ல வேலிடிட்டி உடன் ஓடிடி நன்மையை வழங்குகிறது.

ரூ.77 க்கு புது Jio ரீசார்ஜ்.. நம்ப முடியாத வேலிடிட்டி, OTT!

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.77 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.77 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது மற்றும் சோனி லைவ் ஓடிடி-க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது

ரூ.77 திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மை ஆனது பயனர்களுக்கு வெறும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். ஆனால் சோனி லைவ் ஓடிடி-க்கான இலவச சந்தாவானது 30 நாட்களுக்கு நீடிக்கும். சோனி லைவ் ஓடிடி-யில் உள்ள கன்டென்ட்களை தைபார்க்க ஆர்வமுள்ள பயனர்கள் அதை ஜியோடிவி ஆப் மூலம் ஸ்ட்ரீம் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம், ஜியோடிவி ஆப் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய 2 வகை பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.

ஒருவேளை உங்களுக்கு ஓடிடி நன்மை எதுவும் வேண்டாம், மாறாக குறுகிய காலத்திற்கு மட்டுமே மொபைல் டேட்டாவிற்கான தேவை உள்ளதென்றால் ஜியோவின் ரூ.39 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம் ஜியோவின் ரூ.39 திட்டம் 3 நாட்கள் செல்லுபடியாகும், அதனுடன் அவர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.

மாறாக ஒரே நாளில் 25 ஜிபி டேட்டா தேவைப்பட்டால், நீங்கள் ரூ.49 திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இந்த 2 டேட்டா பேக்குகளிலும் டேட்டா நன்மைகள் மட்டுமே உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.77 திட்டத்தை போல இவைங்களில் டேட்டாவிற்கான எந்த சேவை செல்லுபடியாகும் காலமும் கிடையாது. ஆனால் டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இன்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறையும்.

இருப்பதிலேயே மிகவும் மலிவான திட்டங்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்.. ஜியோவின் ரூ.29 திட்டம் தான் - மிகவும் மலிவான 2வது டேட்டா வவுச்சர் ஆகும். இது 2 ஜிபி டேட்டா மற்றும் 2 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது - ரூ.11 திட்டமாகும், இது 1 மணிநேர செல்லுபடியாகும் மற்றும் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது (அன்லிமிடெட் என்றால் 25 ஜிபி டேட்டா அதிகபட்சம் ஆக கிடைக்கும்)

டெலிகாம் துறை தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை எதிர்காலத்தில், இந்திய டெலிகாம் தொழில்துறையில் மேலும் 2 கட்டண உயர்வுகள் இருக்கும் என்றும் பிஓஎப்ஏ செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. இருப்பினும், அதற்கான சரியான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. அதாவது பிஓஎப்ஏ செக்யூரிட்டீஸ் சொல்லும் விலை உயர்வுகள் எப்போது அமலுக்கு வரும் என்கிற விவரங்கள் வழங்கப்படவில்லை.

இப்படி அடுத்ததாக வரும் விலை உயர்வு ஆனது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.300 என்கிற ஏஆர்பியு (ARPU - Average revenue per user) என்கிற இலக்கை அடைய உதவலாம். எடுத்துக்காட்டுக்கு ஏர்டெல் நிறுவனமானது, அதன்கட்ட ரீசார்ஜ் விலை உயர்வின் போது சுமார் 10-15% விலை உயர்வை அறிவிக்கும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் ஏஆர்பியு -அதாவது ஒரு பயனருக்கான சராசரி வருவாய் ஆனது ரூ.300 ஐ தொடும்.

இந்த விலை உயர்வு (15% விலை உயர்வு) இப்போது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ரூ.344 ஆகவும், ரூ.349 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டத்தின் விலை ரூ.401 ஆகவும் அதிகரிக்கலாம். அடுத்த விலை உயர்வு குறித்த பேச்சுக்கள் ஏற்கனவே உள்ளன, அது விரைவில் செயல்படுத்தப்படுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio New Plan Rs 77 Data Pack Introduced With 3GB Data and Free SonyLIV OTT With 30 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X