அடிச்சார் பார் அம்பானி.. 50 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய Jio திட்டம் அறிமுகம்.. கஸ்டமர்களை பிடிக்க முடியல!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கீழ் அணுக கிடைக்கும் சேவைகளில் ஒன்றான ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) வாடிக்கையாளர்களுக்காக புதிய சலுகை திட்டம் (New Offer Plan) ஒன்று அறிமுகம் செய்துள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி வாடிக்கையாளர்களுக்கான இந்த புதிய திட்டம் 50 நாட்கள் என்கிற வேலிடிட்டி (50 Days Validity) உடன் வருகிறது. அதென்ன திட்டம்? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
என்ன திட்டம்? ஜியோ நிறுவனமானது ரூ.1111 செலவில் புதிய ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை 50 நாட்களுக்கு முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது. 50 நாட்கள் என்பது 1.5 மாதங்களுக்கும் மேலாக இருப்பதால் (மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில்) இது மிகவும் மலிவான திட்டமாகும்.

இது மட்டுமின்றி, இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 நிறுவல் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும். நினைவூட்டும் வண்ணம் கடந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை காலம் முதலே 3, 6 மற்றும் 12 மாத திட்டங்களுடன் புதிய ஏர்ஃபைபர் இணைப்புக்கான நிறுவல் கட்டணத்தை ஜியோ தள்ளுபடி செய்து வருகிறது
இருப்பினும், இப்போது இந்த 50 நாள் வேலிடிட்டி திட்டத்திலும் கூட வாடிக்கையாளர்கள் இலவச நிறுவலை பெறலாம். இதுகுறித்த மெசேஜ் ஜியோ 5ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நன்மைகளை பொறுத்தவரை ரூ.1,111 மதிப்புள்ள ஜியோ ஏர்ஃபைபர் திட்டமானது ஓடிடி நன்மைகளுடன் 1 ஜிபிபிஎஸ் வரையிலான பதிவிறக்க வேகத்தின் கீழ் 5ஜி டேட்டாவை வழங்கும்.
முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, இந்த புதிய ஜியோ ஏர்ஃபைபர் சலுகை ஆனது ஏற்கனவே ஜியோ 5ஜி பயனர்களாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதாவது இது ஜியோ 5ஜி வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக சலுகையாகும். எனவே, நீங்கள் ஜியோ 5ஜி பயனராக இல்லாவிட்டால், இந்த சலுகையை பெற வாய்ப்பில்லை.
ஜியோ ஏர்ஃபைபர் சேவை ஆனது இப்போது நாடு முழுவதும் அல்லது பெரும்பாலான இடங்களில் அணுக கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆபரேட்டர்களை விடவும், ஜியோ நிறுவனமானது மிகப்பெரிய எப்டபுள்யூஏ கனெக்ஷன் யூஸர் பேஸை கொண்டுள்ளது. ஏர்ஃபைபர் சேவையின் மூலம், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 1 மில்லியன் வீடுகளை சென்றடையவும் ஜியோ இலக்கு வைத்துள்ளது.
ஜியோ தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில், தனது நிறுவனத்தின் 47வது ஆண்டு பொதுகூட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட வெல்கம் ஆபரும் (Welcome Offer) வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. இது 100ஜிபி அளவிலான ஏஐ கிளவுட் ஸ்டோரேஜை முற்றிலும் இலவசமாக வழங்கும் ஜியோ ஏஐ கிளவுட் வெல்கம் ஆபர் (Jio AI Cloud Welcome Offer) ஆகும்.
இந்த வெல்கம் ஆபரும் கூட ர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு கிடைக்கும் என்றும், இதனுடன் சேர்த்து ஜியோவின் புதிய ஏஐ அம்சங்களுக்கான ஆரம்ப அணுகலும் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ பயனர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வழியாக ஜியோ ஏஐ கிளவுட் வெல்கம் ஆபருக்கான அறிவிப்பு கிடைத்தது.
அந்த மெசேஜில் 100ஜிபி இலவச ஸ்டோரேஜ் (100GB free storage), ஏஐ மெமரீஸ் (, AI Memories), ஏஐ ஸ்கேனர் (AI Scanner), டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் புதிய ஏஐ அம்சங்களை முன்கூட்டிய அணுகல் (Early access to new AI features) ஆகியவைகளை அனுபவிக்கவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.601 மதிப்புள்ள ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ட்ரூ 5ஜி அப்கிரேட் கிஃப்ட் வவுச்சர் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ரூ.601 திட்டமானது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். இது 4ஜி நெட்வொர்க்கில் உள்ள பயனர்களை 5ஜியை அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.
அறியாதோர்களுக்கு 1.5ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்தவர்களுக்கு தற்போது இலவச ஜியோ 5ஜி டேட்டா அணுக கிடைபதில்லை. ஆனால் ரூ.601 மதிப்புள்ள 5ஜி அப்கிரேட் வவுச்சரை ரீசார்ஜ் செய்வதன் மூலம் அது கிடைக்கும். ஜியோவின் ரூ.601 ஆனது மொத்தம் 12 தனிப்பட்ட டேட்டா வவுச்சர்களை உள்ளடக்கிய திட்டமாகும். ஒவ்வொரு மாதமும் ரூ.51 மதிப்புள்ள டேட்டா வவுச்சர் கிடைக்கும். இப்படி மொத்தம் 12 மாதங்களுக்கு 12 டேட்டா வவுச்சர்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








