கப்சிப்.. விலை உயர்வை மறந்த Jio கஸ்டமர்கள்.. சுதந்திர தின ஆஃபரை அறிவித்த அம்பானி.. ஆக.15 வரை 30% தள்ளுபடி!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, தனது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் மீதும் 25 சதவீதம் வரையிலான விலை உயர்வை (Price Hike) அறிவித்த நாளில் இருந்து, தற்போது வரையிலாக.. கடும் விமர்சனங்களையும், கணிசமான வாடிக்கையாளர்கள் இழப்பையும் சந்தித்து வருகிறது. இந்த சிக்கலை சமாளிக்கும் வண்ணம் விலை, சில தினங்களுக்கு முன்னர் 3 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது விலை உயர்வையே மறக்கடிக்கும் படியான ஒரு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஃப்ரீடம் ஆஃபர் (Jio Freedom Offer 2024) என்கிற புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் ஜியோ நிறுவனத்தின் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் சேரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 30% தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டிற்கு ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் ஸ்டாண்டர்ட் 3 மாத திட்டத்தின் விலை ரூ.2,121 ஆகும் . மேலும் இதற்கான நிறுவல் கட்டணம் ரூ.1,000 ஆகும். ஆகமொத்தம் எந்த சலுகையும் இல்லாமல் ரூ.3,121 செலவாகும். ஆனால் ஜியோ ஃப்ரீடம் ஆஃபரின்கீழ். நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது, எனவே புதிய வாடிக்கையாளர்கள் ரூ.2,121 செலுத்தினால் போதும்!
அதாவது இந்த சலுகையின் கீழ் புதிய ஏர்ஃபைபர் பயனர்களுக்கு நிறுவல் கட்டணமான ரூ.1,000 தள்ளுபடி செய்யப்படுவதே 30% தள்ளுபடியாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஜியோவின் இந்த ஃப்ரீடம் ஆஃபர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகையை பெறுவது எப்படி? புதிய ஜியோ ஏர்ஃபைபர் கனெக்ஷனை பெற, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (Jio Website) சென்று உங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் 60008 60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் (Missed call ) கொடுக்கவும்.
இந்த சலுகையை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன ? ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்பட்ட அனைத்து புதிய முன்பதிவுகளும் இந்த சலுகைக்கு தகுதி பெறும். அனைத்து வகையான வேலிடிட்டிக்கும் (3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள்) இந்த சலுகை பொருந்தும்.
புதிதாக சேர்க்கப்பட்ட 3 திட்டங்களின் விலை மற்றும் நன்மைகள் என்ன? முன்னரே குறிப்பிட்டபடி , திடீர் விலை உயர்வு தொடர்பான விமர்சனங்களை சமாளிக்க மற்றும் சேவையை விட்டு வெளியேறும் வாடிக்கையாளர்களை தடுக்க, ஜியோ நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. அவைகள் ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.329 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ஜியோவின் ரூ.329 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதலாக ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) நன்மையும் கிடைக்கும். உஇந்த திட்டத்தில் ஜியோவின் 5ஜி சலுகை எதுவும் இல்லை.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டம் தான் 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது. மேலும் இந்த திட்டம் ஜியோவின் 5ஜி வெல்கம் ஆபரையும் வழங்கும்.
3. ரிலையன்ஸ் ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதலாக ஜியோடிவி மொபைல் ஆப்ஸ் மூலம் சோனிலிவ் மற்றும் ஜீ5 ஆகிய ஓடிடி சந்தாக்களும் கிடைக்கும். இந்த திட்டத்துடன் ஜியோ அன்லிமிட்ட் 5ஜி சலுகையும் தொகுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








