Jio-வின் ரூ.99 பவர் பாஸ்.. ரூ.1457 க்கு நன்மைகள்.. டேட்டா, TV சேனல், OTT.. அள்ளி கொடுக்கும் அம்பானி!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ஆனது பிராட்பேண்ட், லைவ் கிரிக்கெட் ஸ்ட்ரீமிங், டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை ஒரே தொகுப்பின் கீழ் வழங்கும் வரையறுக்கப்பட்ட கால ஜியோ ஹோம் கிரிக்கெட் சலுகையை (JioHome Cricket Offer) அறிமுகப்படுத்தி உள்ளது.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை மனதில் வைத்து அறிவிக்கப்பட்டு உள்ள இந்த சலுகை, வெறும் ரூ.99 பவர் ப்ளே பாஸுடன் தொடங்குகிறது. இது மைஜியோ ஆப் (MyJio App) மற்றும் ஜியோவின் வலைத்தளம் (Jio Website) வழியாக அணுக கிடைக்கிறது.

இதன்கீழ் கிடைக்கும் நன்மைகளை திறக்க, பயனர்கள் பாஸை வாங்கி, பின்னர் ஜியோஹோம் பிராட்பேண்ட் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டும். சலுகைகள் உடனடியாக அல்லாமல் அடுத்தடுத்த பில்லிங் சுழற்சிகளில் பயன்படுத்தப்படும். அதாவது முதல் மற்றும் தகுதிவாய்ந்த ரீசார்ஜுக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் ரூ.707 வரை மதிப்புள்ள ஒரு மாத இலவச ஜியோஹோம் பிராட்பேண்ட் நன்மையை பெறுகிறார்கள்.
மேலும் எதிர்கால ரீசார்ஜ்களுக்கு ஐந்து ரூ.150 வவுச்சர்களாக வழங்கப்படும் ரூ.750 கேஷ்பேக் கிடைக்கும். இப்படியாக இந்த சலுகையின் மொத்த மதிப்பு ரூ.1,457-ஐ எட்டக்கூடும் என்று ஜியோ கூறுகிறது, இருப்பினும் உண்மையான சேமிப்பு - உங்களுடைய சேவையின் தொடர்ச்சியான பயன்பாட்டை பொறுத்தது.
சந்தாதாரர்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகளை 4கே தரத்தில் இணக்கமான ஸ்மார்ட் டிவிகளிலோ அல்லது ஜியோவின் 4கே செட்-டாப் பாக்ஸ் மூலமாகவோ ஸ்ட்ரீம் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கேம்களுக்கு மல்டி-கேமரா வியூ அம்சமும் கிடைக்கிறது. இந்த இணைப்பு 30எம்பிபிஎஸ் வரை ஸ்பீடை ஆதரிக்கிறது மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுக்கான அணுகலை உள்ளடக்கியது.
இந்த சலுகையின் கீழ் நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தை பொறுத்து SonyLIV, ZEE5, SunNXT மற்றும் JioHotstar உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களுக்கான அணுகலும் உங்களுக்கு கிடைக்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் மற்றும் டாடா ப்ளே ஃபைபரின் இதே போன்ற தொகுப்புகள் - இந்தியாவின் ஹோம் பிராட்பேண்ட் சேவையின் கீழ் கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தது.
இந்த சலுகை 2026 பிப்ரவரி மாதத்தில் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு - இந்த சலுகைக்கான தகுதி மற்றும் கிடைக்கும் தன்மை வேறுபடலாம்.
கிரிக்கெட் போட்டிகள், குறிப்பாக பெரிய ஸ்க்ரீன்களில் போட்டிகளை பார்க்க விரும்பும் நகர்ப்புற வீடுகளில், டேட்டா பயன்பாடு மற்றும் புதிய பிராட்பேண்ட் இணைப்புகளில் - அதிகரிப்பை ஏற்படுத்துகின்றன. ஜியோவின் ரூ.99 என்கிற நுழைவுப்புள்ளி இந்த அதிகரிப்பை இன்னும் எளிமையாக்கும் என்பதில் சதேகமே வேண்டாம்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் சாட்ஜிபிடி: இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டின் (India AI Impact Summit) போது, இந்திய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ ஹாட்ஸ்டார் ஆனது சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓப்பன்ஏஐ உடனான ஒரு கூட்டணியை அறிவித்தது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சாட்ஜிபிடி அடிப்படையிலான வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அசிஸ்டென்ட் ஆனது ஜியோ ஹாட்ஸ்டார் ஆப்பில் நேரடியாக ஒருங்கிணைக்கப்படும்.
இந்த கூட்டாண்மையின் மையத்தில், ஓப்பன்ஏஐ ஏபிஐக்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி-பவர்டுஇன்டர்பேஸ் உள்ளது என்று ஜியோ ஹாட்ஸ்டார் ஒரு செய்திக்குறிப்பில் விளக்கினார். இந்த இரண்டு நிறுவனங்களும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், இதன் கீழ் வரும் மல்டிலிங்குவல் டிக்ஸ்கவரி டூல் ஆனது டெக்ஸ்ட் டூ ஸ்பீச் மற்றும் ஏபிஐ-களுடன் டெக்ஸ்ட் ஜெனரேஷன் திறன்களை இணைத்து, வாய்ஸ் இன்ட்ராக்சன்களை ஆதரிக்கும் என்று நம்பப்படுகிறது.
சுருக்கமாக - ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஓப்பன் ஏஐ அந்த 'பன்மொழி அறிவாற்றல் தேடல்' (Multilingual Cognitive Search) என்கிற அம்சத்தை செயல்படுத்தும். இது பயனர்கள் மனநிலை, சூழ்நிலை, ஜேனர் விருப்பம் அல்லது மிகவும் குறிப்பிட்ட சூழ்நிலை உட்பட அவர்களின் நோக்கத்தை எளிமையாக பேசவோ அல்லது டைப் செய்யவோ அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications








