Jio அம்பானிக்கு அடிங்க சல்யூட்.. ரூ.100 க்கு எக்ஸ்ட்ரா கோல்ட், 30 நாள் வேலிடிட்டி, இலவச JioHotstar சந்தா!
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அறிவித்திருந்த "பெஸ்டிவ் ஆபர்" (Festive Offer) ஆனது இன்னமும் பல திட்டங்களில் தொடர்ந்து கிடைப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஜியோவின் ரூ.100 திட்டத்தில் இன்னமும் "அந்த" ஆபர் கிடைக்கிறது.
ரூ.100 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? முதலில் இதுவொரு ஆட்-ஆன் பேக் ஆகும். அதாவது பிரதானமாக டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும் ஒரு பிளான் ஆகும். இதன்கீழ் கிடைக்கும் டேட்டாவிற்கு மற்றும் இதர நன்மைகளுக்கு 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி கிடைத்தாலும், இந்த திட்டத்திற்க்கென சர்வீஸ் வேலிடிட்டி எதுவும் கிடையாது. இதை ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள திட்டத்திற்கு மேலாக மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.

ரூ.100-ன் கீழ் உங்களுக்கு மொத்தம் 5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா உங்கள் அக்கவுண்டில் மொத்தம் 30 நாட்களுக்கு இருக்கும். இதை நீங்கள் 30 நாட்களுக்கு சிறிது சிறிதாவும் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் ஹெவி டேட்டா பயன்பாட்டிற்கு ஏற்ப ஒரே நாளில் கூட காலி செய்யலாம். ஆகையால் இந்த திட்டத்தின் கீழ் "சிறப்பான, தரமான" 3 கூடுதல் நன்மைகளை ஜியோ வழங்குகிறது.
முதலாவதாக - 30 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை (மொபைல் / டிவி) கிடைக்கும். இரண்டாவதாக தகுதியுள்ள பயனர்களுக்கு ஜியோ கோல்டில் 1% கூடுதல் தங்கம் கிடைக்கும். இந்த சலுகையை பெற +91-8010000524 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் கோரலாம். மூன்றாவதாக ஜியோஹோம் சேவையின் கீழ் புதிய கனெக்ஷனில் 2 மாத இலவச சோதனையை பெறலாம்.
ஆக ரூ.100 க்கு வெறுமனே 5ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்காமல் இது ஓடிடி, கோல்ட் மற்றும் இலவச பிராட்பேண்ட் என கிட்டத்தட்டவிலையை மீறிய பல கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இதேபோன்ற நன்மைகள் மற்ற சில திட்டங்களில் கிடைத்தாலும், இதுதான் மிகவும் மலிவானதாக இருக்கிறது; மற்றவைகள் சற்றே விலை அதிகமான திட்டங்களாக உள்ளன.
சமீபத்தில் ஜியோ நிறுவனம் அதன் அனைத்து பயனர்களுக்கும் கூகுள் ஜெமினி ஏஐ (Google Gemini AI) சந்தாவை இலவசமாக வழங்க தொடங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னதாக இது 25 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இது அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
சுவாரசியமாக இந்த இலவச சந்தாவின் கீழ் கூகுளின் லேட்டஸ்ட் ஜெமினி 3 (Gemini 3) மாடல் அணுக கிடைக்கிறது. இது தகுதியான ரீசார்ஜ்களை செய்யும் ஜியோ பயனர்களுக்கு அடுத்த 18 மாதங்களுக்க இலவசமாக வழங்கப்படும். இந்த கூகுள் ஏஐ-க்கான 18 மாத சாந்தாவின் உண்மையான மதிப்பு ரூ.35,100 ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த இலவச சலுகையில் கவனிக்க வேண்டிய 4 முக்கியமான விஷயங்கள்:
- ஜியோவின் வரம்பற்ற 5ஜி (ரூ.349 முதல் தொடங்குகிறது) பயனர்களுக்கு மட்டுமே ஜெமினி ப்ரோ திட்டம் (ரூ.35,100 மதிப்பு) 18 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும்
- கூகுள் அதன் ஜெமினி ஏஐ-ஐ ஜெமினி 3 மாடலாக மேம்படுத்தியுள்ளது
- மைஜியோவில் உள்ள "கிளைம் நொவ்"பேனர் வழியாக இந்த இலவச சலுகையை உடனடியாக செயல்படுத்தலாம்
- இந்த சலுகை ஏற்கனவே (நவம்பர் 19, 2025 முதல்) அணுக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








