மொபைல் விலைக்கு லேப்டாப்.. கம்மியா கொடுக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா? JioBook ஆர்டர் பிச்சிக்க போகுது!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது இரண்டாவது லேப்டாப் மாடலை, அதாவது புதிய ஜியோபுக் 2023 லேப்டாப்பை (JioBook 2023 Laptop) வருகிற ஜூலை 31 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கிடையில் இந்த லேப்டாப்பின் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஜியோபுக் 2023 லேப்டாப் ஆனது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாக அறிமுகம் செய்யப்படும் மற்றும் அதன் வழியாகவே விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த டீஸர் ஒன்றும் அமேசான் வலைதளத்தில் நேரலையில் உள்ளது.

அந்த டீஸரின் வழியாக புதிய ஜியோபுக் 2023 மாடலானது, முன்னதாக வெளியான மாடலை விட இலகுவானதாக இருக்கும்; அதாவது எடை குறைவாதானதாக இருக்கும். ஜியோவின் கூற்றுப்படி, இதன் எடை வெறும் 990 கிராம் மட்டுமே இருக்கும். நினைவூட்டும் வண்ணம் பழைய ஜியோ லேப்டாப்பின் எடை 1.2 கிலோ ஆகும்.
லைட்-வெயிட் டிசைன் மட்டுமே ஜியோபுக் 2023 லேப்டாப்பின் முக்கிய சிறப்பம்சமாக இருக்க போவதில்லை. ஏனென்றால் இந்த லேப்டாப் "ஒரு முழு நாளுக்கான பேட்டரி லைஃப்பை" வழங்கும் என்றும் ஜியோ கூறுகிறது. ஆக நல்ல டிசைனை மட்டுமல்ல கூடவே நல்ல பேட்டரி லைஃப்பை எதிர்பார்ப்பவர்களையும் கூட ஜியோபுக் 2023 லேப்டாப் ஆனது இம்ப்ரெஸ் செய்யும் என்பது போல் தெரிகிறது!
இதுதவிர்த்து புதிய ஜியோபுக் 2023 லேப்டாப் ஆனது ஆக்டா கோர் ப்ராசஸர் (Octa-core processor) மூலம் இயக்கப்படும் என்பதும், இந்த புதிய ஜியோ லேப்டாப் ஆனது ஜியோஓஎஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் (JioOS operating system) கீழ் இயங்கும் என்பதும் கூட உறுதி செய்யப்பட்டுள்ளது
4ஜி கனெக்டிவிட்டிக்கான ஆதரவுடன் (4G Connectivity Support) வரும் ஜியோபுக் 2023 லேப்டாப்பில் ஜியோமீட் (JioMeet), ஜியோக்ளவுட் (JioCloud), ஜியோசெக்யூரிட்டி (JioSecurity) மற்றும் பல ப்ரீ-லோலட் ஆப்களும் இடம்பெறும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது நீலம் மற்றும் சாம்பல் என்கிற 2 விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும்.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 91மொபைல்ஸ் வழியாக வெளியான அறிக்கையின்படி, ஜியோபுக் 2023 லேப்டாப் ஆனது இந்தியாவில் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் ஜியோபுக் லேப்டாப் ஆனது ரூ.15,799 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆக எப்படி பார்த்தாலும் புதிய ஜியோபுக் 2023 மாடலானது ரூ.19,000-ஐ சுற்றிய விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் அல்ல. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஜியோபுக் லேப்டாப்பின் அம்சங்களை பொறுத்தவரை, இது 11.6-இன்ச் அளவிலான எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் (Qualcomm Snapdragon 665 SoC) உடனாக அட்ரெனோ 610 ஜிபியு (Adreno 610 GPU) மூலம் இயக்கப்படுகிறது. ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும், 2 ஜிபி ரேம்-ஐயும் கொண்டுள்ளது.
கடைசியாக ஜியோவின் முதல் லேப்டாப் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. ஜியோ நிறுவனத்தின் கூற்றிப்படி, இந்த லேப்டாப்பை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அது மொத்தம் 8 மணிநேர பேட்டரி லைஃப்பை ( 8 Hours Battery Life) வழங்கும்.
ஜியோ தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சமீபத்தில் ஜியோ நிறுவனத்தின் புதிய 4ஜி மொபைலாக ஜியோபாரத் 4ஜி மாடல் ரூ.999 க்கு அறிமுகமானது. இந்த பீச்சர் போன் ஆனது 1.77 இன்ச் க்யூவிஜிஏ டிஎஃப்டி டிஸ்பிளே, டார்ச்லைட்டுடன் கூடிய 0.3எம்பி ரியர் கேமரா, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் 1,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








