விஐ வீழ்ச்சி., இது ஜியோ நேரம்- வரம்பற்ற டேட்டா, 60 நாள் வேலிடிட்டியோடு ஜியோ சுதந்திர ப்ரீபெய்ட் திட்டம்!
ஜியோ நிறுவனம் சமீபத்தில் புதிய சுதந்திர தின ப்ரீபெய்ட் திட்டங்களை தினசரி டேட்டா வரம்பு இன்றி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டங்களின் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.127 முதல் ரூ.2397 வரை இருக்கிறது.

சுதந்திர ப்ரீபெய்ட் திட்டம்
சுதந்திர தின சலுகையாக ஜியோ சமீபத்தில் புதிய சுதந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை தினசரி டேட்டா வரம்பின்றி அறிமுகம் செய்தது. மாதாந்திரம் திட்டம் என 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை வழங்காமல் இது 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் புதிய மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் உட்பட பிற ஜியோ பயன்பாட்டு அணுகலோடு இந்த திட்டங்கள் வழங்கப்படுகிறது.

60 நாட்கள் வரம்பு
ஜியோவின் ரூ.447 சுதந்திர ப்ரீபெய்ட் திட்டம் 60 நாட்கள் வரம்போடு வருகிறது. இந்த திட்டம் தினசரி வரம்பின்றி மொத்தம் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஜியோ செயலி சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் ஜியோ வழங்கும் ரூ.349 திட்டமானது வழக்கமான ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டமானது தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்-களுடன் வருகிறது. இந்த திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது.

ஜியோ ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம்
அதேபோல் ஜியோ ரூ.444 ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டிருக்கிறது. இது வரம்பற்ற அழைப்புகளுடன் தினசரி 2 ஜிபி டேட்டா அனுமதியோடு வருகிறது. இந்த திட்டம் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவுடன் தினசரி 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.447 திட்டம்
அதேபோல் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஒரு சிறப்பு கட்டண வவுச்சரை ரூ.447-க்கு நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் மொத்தம் 100 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. இதில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு போன்ற சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ரூ.448 விலையில் ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் ரூ.448 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டமானது ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். வருடாந்திர விஐபி சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் நன்மைகளை வழங்குகிறது. இது விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி சந்தாக்களை வழங்குகிறது.

விஐ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்
விஐ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டமானது இரட்டை தரவு திட்டமாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு நிறுவனம் 4ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் சிறந்த அம்சமானது இதன் ரோல் ஓவர் பயன்பாடாகும். திங்கள் முதல் வெள்ளி வரை மீதமுள்ள தரவுகளை வார இறுதி நாட்களில் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








