பழைய அம்பானி வந்துட்டாரு டோய்.. Jio அறிவித்துள்ள புதிய ஆஃபர்.. அடிச்சு புடிச்சு ரீசார்ஜ் செய்யும் யூசர்கள்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட போது, ஜியோ 4ஜி சிம் கார்டு-ஐ வாங்கினாலே போதும்.. முற்றிலும் இலவசமாக 4ஜி ஹை-ஸ்பீட் டேட்டா, வாய்ஸ் கால்கள் போன்ற நன்மைகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது அல்லவா? அதே பாணியில் புதிய ஜியோ ஆஃபர் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனமானது அதன் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது. அதென்ன திட்டங்கள்? அவைகளின் வழக்கமான நன்மைகள் என்ன? எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபரின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மை என்ன? இதோ விவரங்கள்:

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபர் (Extra Data Offer) ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான டேட்டா நன்மைகளோடு சேர்த்து கூடுதல் டேட்டா வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அந்த திட்டங்கள் ரூ.399 மற்றும் ரூ.199 ஆகும்.
ஜியோ ரூ.399 திட்டத்தின் கீழ் தற்போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.61 மதிப்புள்ள டேட்டா பேக்கின் கீழ் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். அதாவது 6ஜிபி அளவிலான எக்ஸ்ட்ரா டேட்டா இலவசமாக கிடைக்கும்.

ரூ.399-ன் வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை, இது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபரின் கீழ் கிடைக்கும் 6ஜிபி இலவச டேட்டாவையும் சேர்த்து, இதன்கீழ் தற்போது மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கிறது.
மற்ற "வழக்கமான" நன்மைகளை பொறுத்தவரை, ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், இது செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் (100 Free SMS Per Day) நன்மைகளும் கிடைக்கும். கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தாக்களும் இலவசமாக கிடைக்கும்.

ஜியோ ரூ.219 திட்டத்தின் கீழ் தற்போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.25 மதிப்புள்ள டேட்டா பேக்கின் கீழ் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். அதாவது 2ஜிபி அளவிலான எக்ஸ்ட்ரா டேட்டா இலவசமாக கிடைக்கும்.
ரூ.219-ன் வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை, இது 14 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 42ஜிபி டேட்டா கிடைக்கும். எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபரின் கீழ் கிடைக்கும் 2ஜிபி இலவச டேட்டாவையும் சேர்த்து, இதன்கீழ் தற்போது மொத்தம் 44ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இதுதவிர்த்து ஜியோவின் ரூ.219 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், இது செல்லுபடியாகும் 14 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்றவைகளுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும்.
கடைசியாக ஜியோவின் ரூ.399 மற்றும் ரூ.219 ஆகிய இரண்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் (Unlimited 5G Data Offer) வழங்குகின்றன. இதன் கீழ் 5ஜி நெட்வொர்க் ஆதரவு (5G Network Support) கொண்ட ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா நன்மைகள் கிடைக்கும்.
முறையே ரூ.399 மற்றும் ரூ.219 ஆகிய இரண்டு திட்டங்களுடன் இலவசமாக கிடைக்கும் ரூ.61 மற்றும் ரூ.25 டேட்டா பேக்குகளை நீங்கள் தனித்தனியாகவும் ரீசார்ஜ் செய்யலாம். ரூ.61-ன் கீழ் 6ஜிபி டேட்டா கிடைக்கும் மற்றும் ரூ.25-ன் கீழ் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இரண்டுமே உங்களிடம் இருக்கும் ஆக்டிவ் / மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications