மறுபடியும் ஒரு தீபாவளி ஆபர்.. வெறும் ரூ.699 க்கு விற்கப்படும் 2 JioBharat 4G போன்கள்.. மாசம் ரூ.123 ரீசார்ஜ்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, மேலுமொரு தீபாவளி ஆபரை (Diwali Offer) அறிவித்து உள்ளது. 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் மீதான தீபாவளி தமாகா ஆபரை (Diwali Dhamaka offer) அறிவித்த வேகத்தில் 2 ஜியோபாரத் 4ஜி ஃபீச்சர் போன்களின் (JioBharat 4G Feature Phones) மீது "மெகா தள்ளுபடி" அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜியோ அறிவித்துள்ள இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகையின் (Limited-time offer) ஒரு பகுதியாக, ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி (JioBharat V2 4G) ஆகிய 2 மாடல்களும் வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இவ்விரு மாடல்களின் அசல் விலை ரூ.999 ஆகும்; அதாவது இவ்விரு போன்கள் மீதும் ரூ.300 தள்ளுபடி/விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே.. இவ்விரு ஜியோபாரத் 4ஜி போன்களுமே, 2ஜி போன்களில் இருந்து அப்கிரேட் ஆக விரும்பும் பட்ஜெட்-வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமான தேர்வாக உள்ளன. இதற்கிடையில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.300 விலை குறைப்பானது இவ்விரு மொபைல்களின் விற்பனையை இன்னும் சூடாக்கும் என்பது போல் தெரிகிறது.
ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி போன்களின் முக்கிய அம்சங்கள்: இவ்விரு மொபைல் பெண்களுமே 1.77-இன்ச் கலர் டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே போன் மெமரியை நீடிக்க அனுமதிக்கும் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகின்றன, இதன் கீழ் பயனர்கள் 128ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம்.
மேலும் 2 மாடல்களுமே 1,000mAh பேட்டரியை கொண்டுள்ளன மற்றும் டிஜிட்டல் ரியர் கேமராவுடன் வருகின்றன. ஜியோ நெட்வொர்க்கின் கீழ் மட்டுமே வேலை செய்யும் ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி ஆகிய இரண்டுமே 23 இந்திய மொழிகளுக்கான ஆதரவை கொண்டுள்ளன.
மேலும் இந்த ஃபீச்சர் போன்களில் ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ பே (JioPay) போன்ற ஆப்களும் உள்ளன. ஜியோபே ஆப் வழியாக க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் யுபிஐ (UPI) கட்டணங்களை செய்யலாம். கடைசியாக இவ்விரு மொபைல்களுமே கால் ரெக்கார்டிங்கை (Call Recording) ஆதரிக்கின்றன.
இவ்விரு ஜியோபாரத் போன்களையுமே ரூ.123 ஜியோபாரத் திட்டம் கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். ரூ.123 ஜியோபாரத் பிளானின் நன்மைகளை பொறுத்தவர. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மாதத்திற்கு 14ஜிபி டேட்டா மற்றும் ஜியோ சினிமா ஆப்பில் இருந்து 455-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுக்கான அணுகல் போன்ற பலதரப்பட்ட நன்மைகளை வழங்குகிறது.
ஜியோ சினிமா ஆப் வழியாக நீங்கள் சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் வீடியோ நிகழ்ச்சிகளை பார்க்கலாம், அதே போல் விளையாட்டு போட்டிகளின் நேரலைகளையும் பார்க்கலாம். கடைசியாக இந்த திட்டம் - ஜியோசாட் (JioChat) ஆப்பை பயன்படுத்தி பயனர்கள் ஒருவருக்கொருவர் மெசேஜ்களை பரிமாறி கொள்ளவும் அனுமதிக்கும்.
2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள ஜியோவின் தீபாவளி தமாக்கா ஆபரை பொறுத்தவரை, 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.899 (காலாண்டு) திட்டம் மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.3,599 (1 ஆண்டு) திட்டம் ஆகியவைகளை ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள வவுச்சர்கள் கிடைக்கும், அவைகளை மைஜியோ ஆப் வழியாக ரீடீம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.3350 மதிப்புள்ள வவுச்சர்களில் ரூ.3000 மதிப்புள்ள ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) வவுச்சர், ஏஜியோவின் (Ajio) ரூ.200 மதிப்புள்ள கூப்பன், ரூ.150 மதிப்புள்ள ஸ்விக்கி (Swiggy) வவுச்சர் ஆகியவைகள் அடங்கும். இலவசமாக கிடைக்கும் வவுச்சர் நன்மைகளோடு, ரூ.899 மற்றும் ரூ.3,599 திட்டங்களின் கீழ் வழக்கமான நன்மைகளும் கிடைக்கும்.
அதாவது ரூ.899 திட்டத்தின் கீழ் ட்ரூ அன்லிமிடெட் 5ஜி டேட்டா , அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 2 ஜிபி டேட்டா + கூடுதலாக 20 ஜிபி டேட்டா என மொத்தம் 200ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் 90 நாட்களுக்கு கிடைக்கும். ரூ.3,599-ன் கீழ் தினமும் 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 912.5 ஜிபி டேட்டா, ட்ரூ அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவை 365 நாட்களுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








