2026 க்கு அடிச்சார் பாரு Jio அம்பானி.. பழையபடி ரூ.200 ரீசார்ஜ்.. அதுவும் 4ஜி, 5ஜி ரெண்டு வகை டேட்டாவுடன்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Relinance Jio) நிறுவனம் ஆனது, இந்தியாவில் உள்ள எந்தவொரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமும் கொடுக்காத, மிகவும் மலிவான 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ரூ.200 க்கும் குறைவான விலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை வழங்கும் ஒரே ஒரு திட்டம் ஜியோவிடம் மட்டுமே உள்ளது
2026 புத்தாண்டு நெருங்கி வருவதால், இந்த திட்டத்தை "2026 ஆம் ஆண்டிற்கான மிகவும் மலிவான 5ஜி ரீசார்ஜ் திட்டம்" (Cheapest 5G recharge plan for 2026) என்றும் கூறலாம். நாம் இங்கு குறிப்பிடும் திட்டத்தின் விலை ரூ.198 ஆகும். இதன் கீழ் நீங்கள் 5ஜி டேட்டாவை மட்டுமல்ல - 4ஜி டேட்டாவையும் பெறலாம், சர்வீஸ் வேலிடிட்டியையும் பெறலாம், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் இலவச எஸ்எம்எஸ் நன்மைகளையும் கூட பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 5ஜி திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ரிலையன்ஸ் ஜியவின் ரூ.198 திட்டம் ஆனது டெய்லி 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா நன்மையுன் வருகிறது. மேலும் இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குவதால், இந்த திட்டம் ஜியோவின் 5ஜி டேட்டா நன்மைக்கும் தகுதி பெறுகிறது (நினைவூட்டும் வண்ணம் 2ஜிபி அல்லது அதற்கு மேலான டேட்டா நன்மையை வழங்கும் திட்டங்கள் மட்டுமே 5ஜி டேட்டா நன்மையை பெறும்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளன)
4ஜி மற்றும் 5ஜி டேட்டா நன்மையை தவிர்த்து ஜியோவின் ரூ.198 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ க்ளவுட் (Jio Cloud ) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஆப்களுக்கான அணுகல்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
ரூ.198 திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் (சர்வீஸ் வேலிடிட்டி) 14 நாட்கள் ஆகும். அதாவது இது 2 வாரங்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது. ஒப்பீட்டளவில் இது அதிக சர்வீஸ் வேலிடிட்டி யை வழங்கும் திட்டம் அல்ல. ஆனால் குறைந்தபட்ச விலை உள்ள திட்டத்தை தேடுபவர்களுக்கு, அதிக அளவு பணம் செலுத்தாமல் தங்கள் பகுதியில் கிடைக்கும் ஜியோ 5ஜி-ஐ முயற்சிக்க விரும்புவோர்களுக்கு - ரூ.198 ஒரு அல்டிமேட் ஆப்ஷன் ஆக இருக்கும்
டெய்லி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய இரண்டிற்குமான நெகிழ்வுத்தன்மையை இது உங்களுக்கு வழங்குகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, முழு டெலிகாம் துறையிலும் 5ஜி டேட்டாவை வெறும் ரூ.200 க்குள் என்கிற விலை நிர்யணயத்தின் கீழ் வழங்கும் ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே மற்றும்ஜியோவின் ரூ.198 திட்டம் மட்டுமே ஆகும்
ஜியோ இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு (அதாவது, அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும்) வழங்குகிறது. இது தவிர, உங்களுக்கு 5ஜி நன்மையை (இன்னும் அதிகமான வேலிடிட்டி உடன) வழங்கும் ஜியோ திட்டங்களும் பல உள்ளன. விஷயம் என்னவென்றால், இப்போது 5ஜி நன்மை ஆனது 2ஜிபி தினசரி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜியோ நிறுவனமானது ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் உள்ள திட்டங்களில் 5ஜி நன்மையை வழங்கி வந்தது. இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது கடைசியாக தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்திய போது இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் ரூ.198 ஆனது இன்னமும் நீக்கப்படாமல் அல்லது எந்த மாற்றங்களையும், திருத்தங்களையும் சந்திக்காமல் தொடர்ந்து 4ஜி, 5ஜி டேட்டாவை வழங்குவதன் மூலம் "பழையபடி" ரூ.200 க்குள் என்கிற பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை 2026 ஆம் ஆண்டிலும் தக்க வைக்க வேண்டும் என்கிற ஜியாவின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








