Home
News

Jio-வில் மீண்டும் மாற்றம்.. இனி ரூ.200 பட்ஜெட்டில் 2 பிளான்கள் தான்.. ஆக்டிவ் சிம் கார்டுக்கு வேற வழியே இல்ல!

முகேஷ் அம்பானி தலைமையிலான இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வலைதளத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. ஜியோவின் மலிவு விலை பிரிவின் கீழ் உள்ள ரீசார்ஜ்கள் (Affordable recharges from Jio) அப்டேட் செய்யப்பட்டுள்ளன

ஜியோ அதன் ரூ.249 திட்டத்தை நீக்கிய பின்னர் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் புதிய திட்டம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் செய்யாமல்.. அதாவது புதிய திட்டங்களை கொண்டு அதன் மலிவு விலை ரீசார்ஜ் பிரிவை அப்டேட் செய்யாமல், ஏற்கனவே உள்ள பழைய திட்டங்கள் மலிவு விலை பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

Jio-வில் மீண்டும் மாற்றம்.. இனி ரூ.200 பட்ஜெட்டில் 2 பிளான்கள் தான்!

ஒருவேளை உங்களால் ஜியோ வலைதளத்தில் உள்ள "மலிவு விலை" பிரிவை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அது ஜியோவின் வேல்யூ பிளான்கள் (Jio Value Plans) பிரிவின் கீழ் உள்ளது. புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள விவரங்களின்படி, இப்போதைக்கு ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் 3 மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள் கிடைக்கின்றன.

1. ரிலையன்ஸ் ஜியோ ரூ.189 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.189 திட்டம் ஆனது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டம் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 2 ஜிபி மொத்த டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு ஜியோ பயனரின் சிம் கார்டு ஆனது 28 நாட்கள் முழுவதும் ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்கிறது.

2. ரிலையன்ஸ் ஜியோ ரூ.209 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.209 திட்டம் ஆனது 22 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டம் டெய்லி 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு ஜியோ பயனரின் சிம் கார்டு ஆனது 22 நாட்கள் முழுவதும் ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்கிறது.

3. ரிலையன்ஸ் ஜியோ ரூ.799 திட்டம் (வேல்யூ பிளான் பிரிவில்): ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799 திட்டம் ஆனது 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டம் டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு ஜியோ பயனரின் சிம் கார்டு ஆனது 84 நாட்கள் முழுவதும் ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்கிறது.

இவைகள் தான், இப்போதைக்கு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மூன்று மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும். ஆனால் இந்த திட்டங்கள் சாதாரண வகை திட்டங்களில் தெரியாது. எடுத்துக்காட்டாக, ரூ.799 திட்டம் 1.5 ஜிபி தினசரி டேட்டா திட்டங்கள் பிரிவின் கீழ் தெரியவில்லை, ஆனால் ஜியோ வலைத்தளம் மற்றும் மை ஜியோ ஆப்பில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது; கொஞ்சம் தேட வேண்டும்!

முன்னரே குறிப்பிட்டபடி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி விட்டது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இப்போதைக்கு இல்லை.

நினைவூட்டும் வண்ணம் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்கள் தினசரி 1 ஜிபி டேட்டாவை பெற்றனர், அதனுடன் இது மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்தது. இதற்காகத்தான் - குறைந்த வருமானம் கொண்ட மற்றும் "மாதந்தோறும்" பட்ஜெட் நிர்ணயம் செய்யும் ஜியோ பயனர்கள் மத்தியில் ரூ.249 திட்டம் மிகவும் பிரபலமான திட்டமாக இருந்தது; ஆனால் இனிமேல் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது.

இருப்பினும் ஜியோவின் ரூ.249 திட்டத்தை விட மலிவான திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அதாவது ரூ.189, ரூ.198 மற்றும் ரூ.239 ஆகிய திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஆனால் இந்த திட்டங்கள் ரூ.249 திட்டத்தை விட கணிசமாக குறைவான வேலிடிட்டியை வழங்குகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio made changes in website Affordable recharge category updated with old plans Rs 189 Rs 209
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X