BSNL காட்டில் மழை தான்.. 8.5 லட்சம்.. நொந்துபோன ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா.. ஏன்? இதோ முழு விவரம்..
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்திய நாள் முதல் தற்போது வரை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர். குறிப்பாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தற்போது வரை திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. அதேசமயம் நாடு முழுவதும் 4ஜி சேவை மற்றும் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
இந்நிலையில் டிராய் (TRAI) என்று அறியப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜியோவில் (Jio) இருந்து 79.7 லட்சம் கஸ்டமர்கள் வெளியேறி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து ஏர்டெல் (Airtel) நிறுவனம் 14.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்பு வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் 15.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. குறிப்பாக நாடுமுழுவதும் இன்னும் 5ஜி சேவையை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் 8.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்து அதிரடி காட்டியுள்ளது.
குறிப்பாக ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அவ்வப்போது சில திட்டங்களில் சலுகைகளை மட்டுமே வழங்கி வருகின்றன. ஆனால் எந்த திட்டங்களின் விலையையும் குறைக்கவில்லை. அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய சேவைகளைக் கொண்டுவருகிறது. எனவே தான் அதிக பயனர்கள் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
அதேபோல் கடந்த அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவியுள்ளதாகத் தெரிவித்தது. அவற்றில் 41,000க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அதுவும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட புதிய 4ஜி தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்பது தான் உண்மை. அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎன்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிய பின்பு 5ஜி சேவையும் விரைவில் அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதேசமயம் நாட்டில் 4ஜி தளங்களை அமைப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து உபகரணங்களும் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் "பூரண சுதேசி" (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும்.
மேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் லைவ் டிவி சேவையை (Live TV Service) களமிறக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தற்போது பிஎஸ்என்எல் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications