செம டுவிஸ்ட்- 9.3 மில்லியன் பயனர்களை இழந்த ஜியோ: மாஸ் காட்டும் ஏர்டெல்: என்ன நடக்குது?., எப்படி நடந்தது?
ஜனவரி 2022-ல் மட்டும் ஜியோ 9.3 மில்லியன் பயனர்களை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஏர்டெல் மட்டுமே புதிய சந்தாதாரர்களை இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிக எண்ணிக்கையிலான வயர்லைன் சந்தாதாரர்கள்
ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான வயர்லைன் சந்தாதாரர்களை ரிலையன்ஸ் ஜியோ இணைத்துள்ளது. ஜியோ மொத்தமாக 0.30 மில்லியன் அதாவது 3,08,340 புதிய வயர்லைன் சந்தாதாரர்களை இணைத்தது. அதேபோல் பாரதி ஏர்டெல் 0.09 மில்லியன் அதாவது 94010, பிஎஸ்என்எல் 0.03 மில்லியன் அதாவது 32098 எனவும் குவாட்ரன்ட் 0.01 மில்லியன் அதாவது 16,749 புதிய வயர்லைன் பயனர்களை இணைத்துள்ளது. மேலும் கட்டண உயர்வுக்கு பிறகு ஜியோ தனது மொத்த சந்தாதாரர் தளத்தில் இருந்து செயலற்ற பயனர்களை தீவிரமாக நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது டிராய் வெளியிட்ட மாதாந்திர செயல்திறன் அறிக்கையின்படி, ஜனவரி 2022-ல் ஜியோ 9.3 மில்லியன் அதாவது 93,32,583 பயனர்களை இழந்துள்ளது. ஜியோ மட்டுமின்றி வோடபோன் ஐடியா (விஐ) மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. வோடபோன் ஐடியா (விஐ) 0.38 மில்லியன் அதாவது 3,89,082 சந்தாதாரர்களையும், பிஎஸ்என்எல் 0.37 மில்லியன் அதாவது 3,77,520 சந்தாதாரர்களையும் இழந்துள்ளனர். அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிலும் பாரதி ஏர்டெல் மட்டுமே வாடிக்கையாளர்களை இணைக்கும் நிறுவனமாக இருக்கிறது. அதாவது ஏர்டெல் ஜனவரி 2022-ல் மொத்தம் 0.71 மில்லியன் அதாவது 7,14,199 பயனர்களை இணைத்துள்ளது.
அதேபோல் டிராய் தரவுகளின்படி, ஜனவரி 2022-ல் மொத்தம் 9.53 மில்லியன் என்என்பி கோரிக்கைகள் செய்யப்பட்டதாக டிராய் தரவு தெரிவித்துள்ளது.

புதிய வயர்லைன் பயனர்களை இணைத்துள்ளது
டிராய் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான வயர்லைன் சந்தாதாரர்களை ரிலையன்ஸ் ஜியோ இணைத்திருக்கிறது. ஜியோ மொத்தம் 3,08,340 அதாவது 0.30 மில்லியன் புதிய வயர்லைன் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. அதேபோல் பாரதி ஏர்டெல் 0.09 மில்லியன் அதாவது 94010, பிஎஸ்என்எல் 0.03 மில்லியன் அதாவது 32098 எனவும் குவாட்ரன்ட் 0.01 மில்லியன் அதாவது 16,749 புதிய வயர்லைன் பயனர்களை இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர்களை கவர புதுப்புது திட்டங்கள்
ஜியோ அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவர காலநிலைக்கு ஏற்ப திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களை ஊக்குவிக்க வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் தற்போது ஐபிஎல் போட்டியை காணுவதை எளிதாக்க பல திட்டங்களை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அதன் சலுகைகளில் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைச் சேர்த்துள்ளது. அந்த திட்டங்களில் ஒன்று தான் ரூ.259 திட்டமாகும். இந்த திட்டத்தில், பயனர்களுக்குப் பல விதமான நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையோடு வருகிறது. ஆம், நீங்கள் படித்தது சரி தான், வழக்கமாகக் கிடைக்கும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வரும் திட்டம் போன்று இது இல்லை. இந்த திட்டம் முழுமையாக ஒரு மாதம் முழுக்க செல்லுபடியாகிறது.

கூடுதல் அணுகல் சலுகை
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த புதிய ரூ.259 திட்டமானது தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றைப் பெறுகிறார்கள். ஆனால், இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் தினசரி தரவு நன்மை முடிந்த பின் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். மேலும், JioCinema, JioTV, JioCloud மற்றும் JioSecurity உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகள் பயனர்களுக்கு ஒரு தொகுப்பாக வழங்கப்படுகின்றன.

30 நாட்களுக்கு முழுமையான சேவை
30 நாட்களுக்கு முழுமையான சேவை கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் இது தான் இந்த திட்டத்துடன் 30 நாட்களுக்கு முழுமையான சேவை செல்லுபடியாகும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல ப்ரீபெய்ட் திட்டமாகும். பலர் 28 நாட்கள் திட்டத்தைப் பெறுவது குறித்தும், 30 நாட்கள் சேவையுடன் வந்த சலுகையைப் பெறுவது குறித்தும் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனம் இதே திட்டத்தை இன்னும் 28 நாட்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நன்மைகளுடன் கிடைக்கும் 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும் திட்டமானது ரூ. 239 விலையில் கிடைக்கிறது. மேலும், ரூ. 20 செலுத்தினால், பயனர்கள் முழு மாதத்திற்கான (30 நாட்களுக்கு) இந்த புதிய திட்டத்தின் மூலம் பெற முடியும்.


Click it and Unblock the Notifications