Home
News

3 வருஷத்துல முதல் அடி.. அம்பானி தலையில் இடி.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் Jio கஸ்டமர்கள்.. ஏன்?

சோனமுத்தா போச்சா.. என்று முகேஷ் அம்பானியை (Mukesh Ambani) பார்த்து கேட்கும் படியான ஒரு சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தை செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர்கள் (Reliance Jio Customers) தான் என்றாலும் கூட, உண்மையில் இது ஒரு பின்விளைவு (Consequence) ஆகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்.. கடந்த ஜூலை 3 ஆம் தேதி நடந்த ஒரு சம்பவத்தின் பின்விளைவாகும். அதென்ன சம்பவம்? ஜியோ கஸ்டமர்கள் அப்படி என்ன செய்துள்ளனர்? இதற்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு? இதோ விவரங்கள்:

ஜூலை 3 ஆம் தேதி என்ன நடந்தது? உங்களில் சிலர் மறந்து இருக்கலாம். ஆனால் இன்னமும் பல ஜியோ கஸ்டமர்கள் புலம்பி கொண்டே தான் இருக்கிறார்கள். ஜூலை 3 ஆம் தேதி தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகள் 12% முதல் 25% வரையிலான விலை உயர்வை கண்டன.

திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் Jio கஸ்டமர்கள்.. ஏன்?

இதனால் ஜியோ சந்திக்கும் பின்விளைவு என்ன? அதிகரிக்கப்பட்ட ரீசார்ஜ் கட்டணங்களின் தாக்கமானது ஜியோவின் பயனர் தளத்தில் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. இரண்டாவது காலாண்டில், ஜியோ சேவையில் இருந்து சுமார் 10900000 வாடிக்கையாளர்கள் (10.9 மில்லியன் கஸ்டமர்கள்; சுமார் 11 லட்சம் பேர்) வெளியேறி உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் இவ்வளவு பெரிய சரிவை கண்டுள்ளது இதுவே முதல்முறையாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பெரும்பாலான கஸ்டமர்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் சேவைக்குள் சென்றுள்ளனர்.

ஏனென்றால் இந்த ஒரு டெலிகாம் நிறுவனம் மட்டுமே இன்னமும் அதன் ரீசார்ஜ் கட்டண திட்டங்களின் விலைகளை உயர்த்தவில்லை. நினைவூட்டும் வன்ணம் ஜியோவை போல (அதே ஜூலை மாதத்தில்) பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கூட தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தின. அப்போது இருந்தே பிஎஸ்என்எல் காட்டில் மழை தான்!

ஆக முகேஷ் அம்பானியின் ஜியோ சாம்ராஜ்யம் சரிகிறதா? இல்லவே இல்லை. ஒரு டெலிகாம் நிறுவனம் தனது கட்டணங்களில் சில மாற்றங்களைக் கொண்டுவரும் போதெல்லாம், பயனர்கள் வேறு நிறுவனங்களுக்கு தாவுவது மிகவும் சகஜமான விஷயம் தான். கிட்டத்தட்ட 11 லட்சம் பயனர்கள் ஜியோவை விட்டு வெளியேறி உள்ளனர் என்பது ஒருபக்கம் இருக்க, ஜியோவின் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 17 மில்லியன் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படியாக ஜியோ நிறுவனமானது 130 மில்லியனாக இருந்த தனது பயனர் எண்ணிக்கையை தற்போது 147 மில்லியனாக உயர்த்தி உள்ளத்தையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனத்தின் ஏஆர்பியு (​​ARPU - Average Revenue per User) ஆனதும் ரூ.181.7 இல் இருந்து ரூ.195.1 ஆக அதிகரித்துள்ளது. ஆக எப்படி பார்த்தாலும் ஜியோ லாபத்தில் தான் இருக்கிறது.

இதுகுறித்த விளக்கத்தில் தனது பயனர் தளத்தை பற்றிய நிலைமையை அறிந்திருப்பதாகவும், இது லாபத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த 5ஜி நெட்வொர்க்கை வழங்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. சுமார் 10900000 பயனர்களை இழப்பது எங்களுடைய வணிகத்தை பாதிக்காது, ஆனால் நிச்சயமாக மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு வாய்ப்பை உருவாக்கும் என்றும் ஜியோ குறிப்பிட்டுள்ளது.

டெலிகாம்டால்க்கின் (TelecomTalk) சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, "எங்களைப் பொறுத்தவரை, ஏஆர்பியு என்பது ஒரு தவறான பெயர். ஏஆர்பியு-வை எண்ணுவதில் எந்த பயனும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். மார்ஜின்களை அதிகரிப்பது ஒரு முக்கிய நெறியாகும். இந்நிறுவனம தனது 8 ஆண்டு காலத்தில் ஏஆர்பியு மீது ஒருபோதும் கண்களை வைக்கவில்லை என்று ஜியோவை சேர்ந்த ஒரு மூத்த நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Lost 10.9 million Customers Mainly to BSNL But Mukesh Ambani not much concerned Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X