இண்டர்நெட் வேகத்தில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ.!

By Prakash
|

தற்சமயம் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதன்படி இந்தியாவில் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளது.

இண்டர்நெட் வேகத்தில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ.!

ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் இப்போது நொடிக்கு 19.6எம்பி முதல் 25.2 வரை உயர்ந்துள்ளது, மேலும் கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி நொடிக்கு 21.8எம்பி வேகத்தில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கியுள்ளது.

செப்டம்பர் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு 21.9எம்பி வரை இருந்தது, மேலும் பார்தி ஏர்டெல்,வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களும் தங்களது அதிகபட்ச இண்டர்நெட் வேகத்தை வழங்கியுள்ளன.

இண்டர்நெட் வேகத்தில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டுமொரு கட்டண யுத்தத்தை தொடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி முதல் புதிய போட்டி திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், தற்போது அதன் புதிய கட்டண திட்டங்களை "ஹேப்பி நியூ இயர் 2018" என்ற பெயரின் கீழ் அறிவித்துள்ளது.

இந்த "ஹேப்பி நியூ இயர் 2018" தொகுப்பின் கீழ் ரூ.199/- மற்றும் ரூ.299/- என்ற இரண்டு புதிய கட்டண திட்டங்கள் அறிமுகமாகியுள்ளன. இரண்டு புதிய ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களில் ஒன்றான ரூ.199/- ஆனது, இதர தொலைத் தொடர்புத் திட்டங்களை போலவே இருந்தாலும், வழக்கம் போல மற்றவர்களை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

ரூ.199/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது நாள் ஒன்றிற்கு 1.2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது உடன் ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் சேர்த்தே வழங்குகிறது.

இண்டர்நெட் வேகத்தில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ.!

மறுகையில் உள்ள ரூ.299/- திட்டமானது, நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் ரூ.199/- போலவே இந்த திட்டமும் ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.

இந்த இரண்டு புதிய கட்டண திட்டங்களை தவிர்த்து, ஏற்கனவே கிடைக்கும் மற்ற ஜியோ கட்டண திட்டங்களில் எந்த விதமான மாற்றமும் திருத்தமும் அறிவிக்கப்படவில்லை. ரிலையன்ஸ் ஜியோப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த இரண்டு புதிய திட்டங்கள் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Jio leads with 21 8Mbps 4G download speed in October TRAI ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X