Home
News

வெறும் ரூ.51 போதும்.. அன்லிமிடெட் 5ஜி.. புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது Jio..

ஜியோ (jio) நிறுவனம் சமீபத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து விட்டது. அதாவது முதலில் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியது. அதன்பிறகு ஒரு வருடம் வேலிடிட்டி தரும் மூன்று முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது இந்த ஜியோ நிறுவனம். இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் கம்மி விலையில் கிடைக்கும் மூன்று திட்டங்கள் 5ஜி டேட்டா நன்மையை வழங்குகின்றன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.51, ரூ.101, ரூ.151 திட்டங்கள் தான் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை வழங்குகின்றன. குறிப்பாக இவை அனைத்து டேட்டா பேக்குகள் ஆகும். இப்போது இந்த மூன்று திட்டங்கள் வழங்கும் நன்மைகளை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வெறும் ரூ.51 போதும்.. புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது Jio..

ஜியோ ரூ.51 திட்டம் (jio rs 51 plan) ஆனது மொத்தமாக 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது இதில் 3ஜிபிக்கான 4ஜி டேட்டா சலுகை மற்றும் அத்துடன் சேர்த்து அன்லிமிடெட் 5ஜி டேட்டா பயன்படுத்த முடியும். குறிப்பாக இப்போது நீங்கள் பயன்படுத்தும் அடிப்படைதிட்டத்தின் வேலிடிட்டி உடன் இவை கிடைக்கின்றன. அதாவது நாள் ஒன்றுக்கு 1ஜிபிக்கு அதிகமான டேட்டா அல்லது ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வைத்திருக்கும் ஜியோ பயனர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும்.

ஜியோ ரூ.101 திட்டமும் ( jio rs 101 plan) 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகைகளை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 6ஜிபி அளவிற்கு 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகையை பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கு 1.5ஜிபி டேட்டா கொண்ட திட்டம் அல்லது ஒரு மாதத்திற்கு மேல் வேலிடிட்டி கொண்ட அடிப்படை திட்டத்தில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.

வெறும் ரூ.51 போதும்.. புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது Jio..

ஜியோ ரூ.151 திட்டம் ( jio rs 151 plan) ஆனது மொத்தம் 9ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது இதில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 9ஜிபிக்காக 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகையைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தவதற்கு மேலே குறிப்பிட்டபடி, 1.5ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்தவர்களுக்கும், இரண்டு மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக ஜியோ செயலி, இணையதளம், யுபிஐ செயலிகள் வாயிலாக இந்த ஜியோ டேட்டா பேக்குகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் சமீபத்தில் ஜியோ நிறுவனம் நீக்கிய அந்த மூன்று முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது ஜியோ நிறுவனம் ரூ.3.662, ரூ.3226 மற்றும் ரூ.3225 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் சமீபத்தில் நீக்கியது. இந்த மூன்று திட்டங்கள் ஓடிடி நன்மைகள் மற்றும் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜியோ ரூ.3,662 ப்ரீபெய்ட் திட்டம் ( Jio Rs 3662 plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா, 365 நாள் வேலிடிட்டி, SonyLIV மற்றும் Zee5 சந்தாவை வழங்கியது.

வெறும் ரூ.51 போதும்.. புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது Jio..

ஜியோ ரூ.3,226 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3226 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, 365 நாள் வேலிடிட்டி, SonyLIV சந்தாவை வழங்கியது. அதைதொடர்ந்துஜியோ ரூ.3225 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3225 plan) தினமும் 2ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி, Zee5 சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கி வந்தது. தற்போது இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது ஜியோ.

குறிப்பாக ஜியோ நிறுவனம் விலை உயர்வை அறிவித்த நிலையில் பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டை வாங்க தொடங்கிவிட்டனர். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. பின்பு இந்நிறுவனம் விரைவில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையைக் கொண்டுவர உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Launches Three True 5G Unlimited Data Plans:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X